15308 வள்ளி அம்மன் நாடகம்.

தாழை செல்வநாயகம் (இயற்பெயர்: கந்தையா செல்வநாயகம்). வாழைச்சேனை: தாழை செல்வநாயகம், கல்குடா வீதி, பேத்தாழை, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (மட்டக்களப்பு: தமிழ் அலைப் பதிப்பகம், இல. 39A, கோவிந்தன் வீதி).

xviii, 19-132 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 19×13.5 சமீ.

வள்ளி அம்மன் நாடகம் இப்பிரதேசத்தின் மற்றெல்லா நாடகங்களுக்கும் முன்னதாக வந்த நாடகம் என்றும் இது உருவில் சிறியதாகவுள்ளதால் “கட்டுப்பெட்டி நாடகம்” என்று கூறப்படுவதாகவும் அப்பிரதேசத்தில் உள்ள அணணாவிமார்கள் குறிப்பிட்டதாக ஆசிரியர் தாழை செல்வநாயகம் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். ஏட்டுப் பிரதியாகவும் அப்பியாசக் கொப்பிகளிலும் எழுதப்பட்டிருந்த இந்நாடகப் பிரதியை கல்குடா-சி.கணபதிப்பிள்ளை அண்ணாவியார், பேத்தாழை மாரி வெள்ளக்குட்டி அண்ணாவியார், கிரான் கோரகலிமடு பொன்னையா அண்ணாவியார் ஆகியோரிடம் இருந்து பெற்று  தாழை செல்வநாயகம் அவர்கள் இந்நாடகத்தை நூலுருவில் ஆக்கியுள்ளார். தாழை செல்வநாயகம் பத்திரிகை நிருபராகவும், வீரகேசரியில் 25 வருடங்கள் கடமையாற்றியதுடன் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல் ஆகியன எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். நாடகம் நடிப்பதிலும், கிராமியப் பாடல் பாடுவதிலும் ஈடுபட்ட பல்கலைக் கலைஞர் இவர். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4700). 

ஏனைய பதிவுகள்

Hong-kong Race

Articles Risk free Wagers step one What Charges And Sanctions Are around for The authorities For Violation Of your own Playing Regulations? Highlights of The