14977 கங்கைவேலி.

சி.நந்தகுமார். திருக்கோணமலை: சிவசுப்பிரமணியம் நந்தகுமார், நகராட்சிமன்ற உறுப்பினர், 1வது பதிப்பு, பெப்ரவரி 1999. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம், 28B புதிய சோனகத் தெரு). (2), 29 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 25×18 சமீ. திருக்கோணமலை நகரிலிருந்து 23 மைல் தொலைவில் உள்ள மூதூர்ப் பகுதியில் அமைந்துள்ள கங்குவேலி என்ற கிராமம் மகாவலி கங்கையை எல்லையாகக் கொண்டது. முன்னர் கங்கைவேலி என்று அழைக்கப்பட்டது. கொட்டியாரபுரப் பற்றிலுள்ள கிராமங்களின் வரலாற்றுப் பின்புலங்களையும் அழிவுக்குள்ளான ஆலயங்களினதும் வரலாறுகளை மீட்டுப்பார்க்க விளையும் முன்முயற்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முன்னர் திருக்கரைசையம்பதியை (கங்குவேலி) மத்தியாகக் கொண்ட ஒரு சைவ சாம்ராச்சியமே இப்பிரதேசத்தில் இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தை இந்நூலாசிரியர் வலியுறுத்துகிறார். அதற்கு ஆதாரமாக இங்கு அண்மைக்காலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள லிங்கம், கோமுகை, பலிபீடம், முக்கூட்டுக் கல், வாயிற்கற்கள், தூண்கள், முதலியவற்றை குறிப்பிடுகின்றார். இவ்வாதாரங்களின்படி சிற்ப சாஸ்திர முறைப்படி அமைந்த மாபெரும் சிவாலயம் ஒன்று இங்கு முன்னர் இருந்திருப்பதை வலியுறுத்துவதாகக் குறிப்பிடுகிறார். மேலும் திருக்கோணமலை மாவட்டத்தில் தலபுராணம் உள்ள இரண்டு கோயில்களில் திருக்கரைசையம்பதியும் ஒன்று. காலவெள்ளத்தில் அழிந்துபோயுள்ள திருக்கரைசை மாநகரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தும்போது கிழக்கில் சைவப் பண்பாட்டுக் கருவூலங்களுக்கு வலுவூட்டும் புதிய தகவல்கள் எமக்கு வந்துசேரலாம். இந்நூல் அத்தகைய ஒரு ஆய்வுக்கு வழிகாட்டும் நோக்கில் புகைப்பட ஆதாரங்களுடன் தகவல்களைப் பதிவுசெய்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21217).

ஏனைய பதிவுகள்

2894 – புனித பயணம்: சிவபாலன் சாந்தரூபன் நினைவு மலர்.

சு.சிவபாலன் (தொகுப்பாசிரியர்). வவுனியா: சு.சிவபாலன், 40, வைரவ கோவில் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை). 175 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 15 சமீ.