14979 கொட்டியாரபுரப்பற்று முதுசங்கள்.

அருமைநாதன் ஸதீஸ்குமார். திருக்கோணமலை: வைத்திய கலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார், 48ஃ190 கண்டி வீதி, விநாயகபுரம், 1வது பதிப்பு, 2016. (திருக்கோணமலை: எஸ்.எஸ்.டிஜிட்டல்ஸ் பிரின்ட்ஸ்). ஒஒஎi, 171 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20×13 சமீ., ISBN: 978-955- 44703-2-3. பழம்பெரும் வரலாற்றைக்கொண்ட கொட்டியாரபுரப்பற்றின் பெருமைகளையும் அதனுடன் சார்ந்த வரலாறுகளையும் பல ஆதாரங்களுடன் இருபது கட்டுரைகளில் ஆவணப்படுத்தும் முயற்சியாக இந்நூல் வெளிவந்துள்ளது. வரலாற்றுக்கால கேந்திர நிலையம் கொட்டியாரத்துறை, திருக்கரைசையம்பதி அகத்தியதாபன சிவன் ஆலயம், கொட்டியாரப்பற்று பிராமி சாசனங்கள், வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி கோவில், சேறுவில மங்கள ரஜமகா விகாரை, சம்பூர் பத்திரகாளி அம்மன் ஆலயம், தேசிய வீரன் இளஞ்சிங்க வன்னிமை, நீலாப்பளை பத்தினியம்மன் ஆலயம் (தாயம்மன்), மூதூர் புனித அந்தோனியார் ஆலயம், சம்பூர் சுடுமண் உருவங்கள், மூதூர் சுடுமண் உருவங்கள், மூதூர் பெரிய பள்ளிவாசல், கும்பவிழா, கொட்டியாரப்பற்று கல்வெட்டு சாசனங்கள், சேனையூர் நாகம்மாள் ஆலயம், கொட்டியாரத்துக் காவியங்கள், திருமங்கலாய் சிவன் ஆலயம், கௌரவ இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம், கொம்பு முறிக்கொம்பு விளையாட்டுச் சடங்கு, பண்டைக்கால துறைமுகப் பட்டினம் இலங்கைத்துறை, வெருகல் கோயில் களவு காவியம் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14920 பாரதரத்னா இந்திரா.

கண.சுபாஷ் சந்திரபோஸ். கொழும்பு 11: மெய்கண்டான் வெளியீடு, 161, செட்டியார் தெரு, 2வது பதிப்பு, டிசம்பர் 1985, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு). (12),