14980 திருக்கோணேஸ்வரம் கையேடு: திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவேடு.

நினைவு மலர்க் குழு. திருக்கோணமலை: நாகராஜா கணபதிப்பிள்ளை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1971. (அச்சக விபரம் தரப்படவில்லை). (30) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×15 சமீ. திருக்கோணமலையைச் சேர்ந்த திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை (சின்னக்கிளி 04.11.1937-31.03.1971) அவர்களின் மறைவின் முப்பத்தியொராம் நாள் நினைவையொட்டி வெளியிடப்பட்ட நினைவுமலர். இம்மலரில் கோணேஸ்வரம் வரலாறு (திருத்தி வாசிக்கப்படுபவை/ஆலயம் அமைந்த வரலாறு/ அரசர்களின் திருப்பணிகள்/ மறுமலர்ச்சி/ பிற தொடர்புகள்/ வில்லூன்றிக் கந்தன்/ முடிவுரை), திருக்கோணமலைத் தேவாரத் திருப்பதிகம், திருக்கோணேஸ்வரம் நிகழ்ச்சிகள், திருமதி கணபதிப்பிள்ளை பத்மாசனி சிவபதமடைந்த திதி வெண்பா/ திருமதி கணபதிப்பிள்ளை பத்மாசனி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21780).

ஏனைய பதிவுகள்

14825 அழியாக் குறிகள் (நாவல்).

மஹிந்த பிரசாத் மஸ்இம்புள (சிங்கள மூலம்), மு.துரைசாமி (தமிழாக்கம்). கொழும்பு: கலாசார அலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, 8ஆவது பதிப்பு, டிசம்பர் 2013, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (கொழும்பு: அரசாங்க