14985 யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3.

வேதநாயகம் தபேந்திரன். யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், தேன் தமிழ், கைதடி வடக்கு, கைதடி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ், 140/1, மானிப்பாய் வீதி). 209 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-41392-4-4. தினக்குரல் வார வெளியீடு, தினகரன் வார மஞ்சரி, வீரகேசரியின் வட பிராந்தியப் பதிப்பு, யாழோசை ஆகிய ஊடகங்களில் 2012-2013 காலகட்டங்களில் வெளியான ஆக்கங்களின் தேர்ந்த தொகுப்பு. யாழ்ப்பாண நினைவுகள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள மூன்றாவது பாகம் இது. யாழ் தேவியின் நினைவுகள், காணிவெல் கண்காட்சிக் காலங்கள், அருகிப்போன வேட்டையாடுதல், அருகிவரும் பாரம்பரிய உணவு வகைகள், பங்கர் கால நினைவுகள், சோதனைச் சாவடி காலங்கள், கடல்வலயத் தடையும் மீனவர் வாழ்க்கை முறையும், ரியுசன் கால நினைவு மீட்டல், போர்க்காலமும் மருத்துவமும், நல்லெண்ணையும் கைத்தொழிலின் கால மாற்றங்களும், அருகிப் போகும் சம்பிரதாயங்கள், பூங்காவனத் திருவிழா, யாழ்ப்பாணத்தில் கொம்யூனிக்கேஷன் யுகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும், வடபகுதிப் புகையிரதச் சேவைகள், எம்மவர் வாழ்விலும் நடைபெற்ற மணமகன் இல்லாத திருமணங்கள், சமூக மாற்றத்தை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பெண்களும் சைக்கிளும், காலவெள்ளத்தில் கரைந்துபோன மாலைநேரச் சந்தைகள் ஆகிய பதினேழு சுவையான கட்டுரைகளை இத்தொகுதியில் காணமுடிகின்றது. அனைத்தும் காலப்போக்கில் நாம் இழந்தபோன அனுபவங்களின் மீள்நினைவூட்டல்களாக உள்ளன. நூலாசிரியர் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார்.

ஏனைய பதிவுகள்

Greatest Casino Internet sites 2024

Content Zetbet Gambling establishment Commission Steps Should i Button Ranging from My Mobile And you may Desktop computer Gambling enterprise Membership? Pay That have Cellular

14006 நூல்தேட்டம் தொகுதி 14.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,