எஸ்.எல்.மன்சூர். கொழும்பு 9: I.B.H. வெளியீட்டகம், 77, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (கொழும்பு 9: இஸ்லாமிக் புக் ஹவுஸ், 77, தெமட்டகொட வீதி). ix, 86 பக்கம், விலை: ரூபா 230., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-706-093-4. Ethnic Cleansing of Rohingya என்ற ஆங்கில உபதலைப்புடன் இந்நூல் வெளி யாகியுள்ளது. பர்மாவில் நடைபெறுகின்ற மிகப்பெரிய மனிதப் படுகொலைகளுக்குப் பின்னணியாக இருந்துள்ள விடயங்களை இந்நூல் வழியாக ஆசிரியர் வழங்கி யுள்ளார். மியன்மாரின் அமைவிடம், இங்குள்ள மக்கள், ரோஹிங்கியர்களின் வரலாற்றுப் பதிவுகள், அந்நாட்டின் இராணுவ ஆட்சியாளர்களின் போக்குகள், இன அழிப்பின் பின்னணி, முஸ்லிம்கள் மீதான துரோகத்தனத்தின் வழிவகைகள் போன்ற விடயங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. மியான்மர் நாட்டு வரைபடத்தில், வங்க தேச எல்லையில், வங்கக் கடலை ஒட்டி ஒரு வால் போல் தொங்குகிற ராகைன் எனப்படும் மியான்மர் நாட்டு மாநிலத்தில் வாழ்கிற முஸ்லிம் இனங்களில் ஒன்றுதான் ரோஹிங்யாக்கள் எனப்படுவோர். வங்க இலக்கியங்களில் ‘ரோஷாங்” எனக் குறிப்பிடப்படும் இவர்கள் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ந்து வந்து இங்கு குடியேறினர். இலங்கையில் தமிழ்த் தந்தி என்ற வார இதழின் வழியாக 2016-2017 ஆண்டுக் காலப்பகுதியில் 20 வாரங்கள் தொடராக எழுதிய கட்டுரைகளே இவை. இத்தொடருடன் ஆசிரியர் சுடர்ஒளி, நவமணி போன்ற நாளிதழ்களிலும் எழுதப்பட்ட இவரது ஆக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 63328). மேலும் பார்க்க: தமிழர் பண்பாடு. 14261