15324 மொழி : கட்டுரைக் கொத்து.

ந.பார்த்தீபன். வவுனியா: தமிழ் மன்றம், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஜீன் 2016. (வவுனியா: விஜய அச்சுப் பதிப்பகம்).

xii, 94 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19.5×14 சமீ., ISBN: 978-955-43350-0-4.

இந்நூலில் மொழி தொடர்பான கொள்கைகளும் கற்றல் செயன்முறைகளும், தமிழ் இலக்கணமும் ஆசிரியர் மாணவரது தற்போதைய மனப்பாங்கும், எண்ணக்கரு உருவாக்கமும் மொழி விருத்தியும், வாண்மைத்துவமிக்க ஆசிரியத்துவத்திற்கும் வாசிப்பின் இன்றியமையாத் தன்மை, உயிர்க் குறிகளின் உயிர்ப்பு, மொழி விருத்தியில் சிறுவர் ஆக்கங்கள், இலக்கண வழுக்களை இனங்கண்டு திருத்தமாக எழுதுவோம், மொழி விருத்தியும் பிள்ளையின் வயதும், ஆரம்பக் கல்வி மாணவர்களின் முன்மொழித்திறன் விருத்தி, பாரெட் என்பவரின் பகுப்பாய்வு வாசிப்பு வகைகள் தொடர்பான கருத்துக்கள், எழுத்துத் திறனும் பிராங் சிமித்தின் எழுதுதற் செயலொழுங்கும், கற்பித்தலின் முறையியல், செம்மொழியாய்ப் பேணுவோம், முதிர்ந்தோர் அதிக நிபுணத்துவமுள்ள பங்காளிகள், ஆரம்பப் பிரிவு மாணவர்களின் மொழித் திறன்களும் அவற்றை மதிப்பீடு செய்தலும், பட்டிமன்றம் ஒரு கல்வி பயில் களம் ஆகிய பதினாறு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நடராஜா பார்த்திபன் வடமராட்சி, கரவெட்டியில் பிறந்தவர். ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர். 1985இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டம் பெற்றவர். 1987இல் ஆசிரியராகவும் 1990இல் ஆசிரிய ஆலோசகராகவும் பணியேற்றவர். 1991இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டத்தையும் 1994இல் தமிழில் முதுகலைமாணிப்பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும்; பெற்றுக்கொண்டவர. 2001முதல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Tragaperras Cleopatra

Content Consiliario De Máquinas Tragaperras: Lo cual Tienes que Saber Primero De Comenzar En Jugar La manera sobre cómo Funcionan Las Tablas De Retribución De