14969 இலங்கை இந்திய ஒப்பந்தம்: ஒரு நோக்கு.

செ.துரைசிங்கம். புத்தளம்: சிந்தியா கலை இலக்கிய வட்டம், இல. 22/17, முதலாம் ஒழுங்கை, கடுமையான்குளம் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை). xiii, 50 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ. இலங்கை இந்திய ஒப்பந்தம் எத்தகைய சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்டது என்பதையும், இதன் வெற்றிக்கும் தோல்விக்கும் உரியவர்கள் யார் என்பதையும் ஆசிரியர் எளிமையாக விளக்கியிருக்கிறார். யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும் புத்தளத்தை வதிவிடமாகவும் கொண்ட நூலாசிரியர் யாழ்ப்பாணக் கல்வித் திணைக்களத்தில் அலுவலக உதவியாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். 1986ஆம் ஆண்டு நெதர்லாந்தின் அம்ஸ்டர்ராம் நகரில் நடைபெற்ற உலக சுவிசேஷகர்கள் மகாநாட்டில் இலங்கைப் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்ட இவர் புத்தளம் பரிகிலமெந்து ஆலயத்தின் சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபாடு கொண்டுழைத்து வரும் சுவிசேஷகராகவும் சேவையாற்றுகிறார். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46703).

ஏனைய பதிவுகள்