15335 காலவெளிக் கதை (அறிவியல் கட்டுரைகள்).

பிரமிள் (மூலம்), கால சுப்பிரமணியம் (பதிப்பாசிரியர்). கோயம்புத்தூர் 641023: எம் ரவிச்சந்திரன், உள்ளுறை, 35-னு, பெரியார் நகர், போத்தனூர், 1வது பதிப்பு, 2009. (கோயம்புத்தூர் 641012: விஷ்மேக்ஸ், கோவை).

(4), 5-64 பக்கம், விலை: இந்திய ரூபா 50.00, அளவு: 21×13.5 சமீ.

திருகோணமலையில் கணபதிப்பிள்ளை விருட்சலிங்கம் (தர்மராஜன்) – அன்னலட்சுமி ஆகியோருக்கு மகனாக 20.04.1939 ஆம் நாள் பிறந்தவர் பிரமிளின். இவரது இயற்பெயர் இயற்பெயர் சிவராமலிங்கம். திருக்கோணமலையில் இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தமது தொடக்கக் கல்வியை கற்றார். பிரமிள் கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், சிற்பம், களிமண் சிற்பம், நாடகம், மொழிபெயர்ப்பு, விமர்சனம், ஆன்மிகம், சோதிடம், எண் கணிதம் என விரிந்த பல தளங்களில் இயங்கியவர். லஷ்மி ஜோதி, இலக்குமி இளங்கோ, கௌரி, பூம்பொற்கொடி இளங்கோ, பிருமிள், பிரமிள் பானு, அரூப் சிவராமு முதலிய புனை பெயர்களில் எழுதியுள்ளார். தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் அவரது வாழ்க்கை ஒரு துறவு நிலையிலேயே பெரிதும் அமைந்திருந்தது. அவரது சொத்துக்கள் எனக் கூறினால் புத்தகங்கள் மட்டுமே. நண்பர் பலரும் அவருக்கு உதவி செய்தனர். புற்று நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் அருகில் உள்ள கரடிக்குடி என்னும் கிராமத்தில் 06.01.1997அன்று காலமானார். அங்கு அவரது நினைவு கல்லறை உள்ளது. பிரமிள் அவ்வப்போது எழுதிப் பிரசுரமான விஞ்ஞானமும் வாழ்வும், குகையியல், அண்டவியல் மும்மூர்த்திகள், காலவெளிக் கதை, ஒளியின் கதை, அணு தாண்டவம், பரிசுத்த விஞ்ஞானமும் பயன்தரும் விஞ்ஞானமும், பிரபஞ்சத்தின் கதை, உலகிற்கு வறட்சி வரும் விதம், கி.பி. 2126இல் பூமிக்குப் பேரழிவு, கம்ப்யூட்டரும் இராமானுஜனும், கம்ப்யூட்டர் என்றொரு மூளை ஆகிய பன்னிரு விஞ்ஞான அறிவியல் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Enjoy Pcf Gambling establishment

Articles Spin Gambling establishment Review Info Federal Local casino Payment And you can Go out Removed To possess Transactions #step 3 Incentives And Promotions Comeon