15342 அடிப்படை இலத்திரனியல்.

J.C.N.ராஜேந்திரா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 237 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 675., அளவு: 24×18 சமீ., ISBN: 978-955-659-588-8.

இந்நூல் க.பொ.த. (உயர்தர) மாணவர்கள், ஆசிரியர்கள், பௌதிகத்தைக் கற்கின்ற பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள்,பொறியியல்துறை மாணவர்கள், மின் மற்றும் இலத்திரனியல் சார்ந்த தொழில்நுட்பக் கற்கை நெறிகளிலே பயில்கின்ற மாணவர்கள் ஆகியோருக்காக ஆழமாகவும் விரிவாகவும் எளிதில் புரியக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் அறிமுகம், அணுக் கட்டமைப்பு, திண்ம நிலைக் கடத்தல், குறை கடத்திகள், p-n சந்தி, இருவாயியின் பிரயோகங்கள், திரான்சிஸ்ரர்கள், செயற்பாட்டு விரியலாக்கி, இலக்க இலத்திரனியல் ஆகிய ஒன்பது இயல்களில் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் ராஜேந்திரா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பௌதிகவியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பிரித்தானியாவில் சஸ்ஸெக்ஸ்  பல்கலைக்கழகத்தில் பௌதிகவியலில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொணடவர். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பௌதிகத்துறையில் சிரேஷ்ட பேராசிரியராகவும் விஞ்ஞானபீடத்தின் பீடாதிபதியாகவும் விளங்குகின்றார்.

ஏனைய பதிவுகள்

15791 மூங்கிலாகும் முட்புதர் (நாவல்).

மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், வேப்பங்குளம், 1வது பதிப்பு, நொவெம்பர் 2018. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி). 208 பக்கம், விலை: ரூபா 350., அளவு: