15343 இலங்கையின் புவிச்சரிதவியல் (Geology of Ceylon).

க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1970. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

80 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 2.75, அளவு: 20×14 சமீ.

இலங்கையின் புவிச்சரிதவியல் குறித்துக் காலத்திற்குக் காலம் பல அறிஞர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவர்களது கருத்துக்கள் நிறைந்த கட்டுரைகள் இன்றைய மாணவ உலகிற்குக் கிடைக்கக்கூடியனவாக இல்லை. திக்கிற்கு ஒன்றாக அக்கட்டுரைகள் பல்வேறு சஞ்சிகைகளில் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டி, ஓர் ஒழுங்கின் கீழ் தொகுத்து புவியியலுலகிற்கு வழங்கவேண்டும் என்ற எண்ணம் இன்று நூலுருப் பெற்றிருக்கின்றது. இலங்கையின் புவிச்சரிதவியல் வரலாற்றை மூன்று கட்டங்களாக வகுத்து ஆராய்ந்துள்ளார்.  முதல் கட்டம், கொண்டுவானாலாந்தின் எஞ்சிய பகுதியே இலங்கை என நிறுவ முயல்கின்றது. இதற்கு அறிஞர்களது ஆதாரங்களைக் காட்டியுள்ளார்;. இரண்டாவது கட்டம், இந்தியத் துணைக் கண்டத்தினின்றும் பிரிவுற்ற பகுதியே இலங்கை என நிறுவுகின்றது. ஒரே கண்டமேடை, ஒரே அடித்தளப் பாறை, ஒரே கல்லியல், ஒத்தபாறைப் போக்குகள் என்பன இதற்கு ஆதாரமாக அறிஞர்கள் கருத்தாகக் காட்டப்பட்டிருக்கின்றன. மூன்றாம் கட்டம் புவியசைவுச் சக்திகளினதும் தின்னற் சக்திகளினதும் ஓயாத மோதலின் விளைவே இலங்கை என நிறுவியுள்ளது. இதற்கு அடம்ஸ், வாடியா, குலரத்தினம் ஆகியோரது கருத்துக்கள் ஆதாரமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. இறுதியில் இலங்கையின் தரைத்தோற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14475).

ஏனைய பதிவுகள்

Bonusi i recenzija Deuce Cluba

Content Casino 770red bonus codes 2024 – сертифікація Local casino Bonus Center The brand new admission is available for the alternatives from a good dos-hr,