15344 பறக்கும் தட்டுகள்: ஒரு விஞ்ஞான நோக்கு.

முஹம்மத் ரஸீன்-மழாஹிரீ. குருநாகல்: தாருல் குர்ஆன் வெளியீட்டாளர்கள், இல. 100, கண்டி வீதி, மல்லவப்பிட்டி, 1வது பதிப்பு, 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி).

24 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 90.00, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-54766-5-8.

குடலைபெ ளுழரஉநசள எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளின் பயண ஊடகம் பற்றிய விரிவான தகவல்களுடனும் புகைப்படங்களுடனும் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பறக்கும் தட்டுக்கள் எங்கிருந்து வருகின்றன, எதற்காக வந்திறங்கிச் செல்கின்றன, அதில் வருபவர்கள் யார்? என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களாக இந்நூலின் தொகுப்பு விரிகின்றது. இலங்கையிலும் அனுராதபுரம், பண்டாரவளை, பொலநறுவை, கம்பஹா, கண்டி போன்ற பிரதேசங்களில் வந்திறங்கிச் சென்ற பறக்கும் தட்டுகள் பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன. ‘ஜின் மனித இனத்தினரே, வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளை விட்டும் நீங்கள் கடந்து செல்ல ஆற்றல் பெறுவீர்களாயின் (அவ்வாறே) கடந்து செல்லுங்கள்’ என்னும் அல்புகுர் ஆனின் (55:33) அறிவியலுக்கு ஆர்வமூட்டும் வசனத்தை அடிப்படையாக வைத்து, பறக்கும் தட்டுக்கள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டமும் நூலில் காணப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்