14971 பிரான்ஸ் தமிழர் போராட்டம்.

மா.கி.கிறிஸ்ரியன். தமிழ்நாடு: விளிம்பு வெளியீடு, த.பாபிரஸ், 1205, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, திருச்சி மாவட்டம், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600005: மணி ஓப்செட்). 176 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 200., அளவு: 22×15 சமீ. இலங்கை அரசின் விடுதலைப் புலிகளுக்கெதிரான போரின் இறுதிக்கட்டத்தின்போது இவ்வினவழிப்பினால் புலம்பெயர் தேசமெங்கும் பொங்கியெழுந்த தமிழர்கள் உலக அரசுகளிடம் நீதிகேட்டு எழுச்சிப் போராட்டங்களை நடத்தினார்கள். அவ்வாறு பிரான்சில் நடந்த போராட்ட நிகழ்வுகளை வாரலாற்று ஆவணமாகத் தந்திருக்கிறார் கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன். ஒற்றுமையின் வலிமையில் என்னுரை, பிரான்ஸ் தமிழர் போராட்டம், பாரிஸ் மையத்திடலில் குதித்தனர் தமிழர், இனிப் போராடும் நிலைப்பாட்டில், புலம்பெயர்ந்தவர்-இடப்பெயர்வு, இரண்டாம் தலைமுறையின் நகர்த்தல், உண்ணாவிரதமும் கவனயீர்ப்பும், பகிஷ்கரிப்பு, அதிர்ச்சியும் ஆத்திரமும், வீதிப் போராட்டத்தின் விழிப்பு, கருத்தும் கடமையும், தொழிலாளர் தினம், நினைப்பும் நிலையும், வட்டுக்கோட்டைத் தீர்மானமும் வாக்கெடுப்பும், ஈபில் கோபுரத்தின் முன் வாக்குறுதி, தமிழீழத்தில் மரணமுகாம்கள், கலைஞர்களின் பங்களிப்பும் கடவுளைப் பணிதலும், தவிப்பும் கொதிப்பும், ஊர்வலத்தின் எழுச்சி, அரசியலா அஞ்சலியா, வணங்காமண், கொடிகளும் சின்னங்களும், தலைமையின் உயிர்த்தெழுதல், யாழ்ப்பாணம், வன்னி, கிழக்கில் புலிகளின் நிர்வாகம், பிரான்ஸ் தமிழர் போராட்டம் பற்றிய கருத்துக்கள், தமிழீழப் போராட்டமும் புலம்பெயர்வாழ் தமிழ் மக்களும், பேசாமல் பேசவைப்பார் பிரபாகரன், அன்பு உறவுகளுக்கு ஒரு வேண்டுதல், அந்த ஐம்பது நாட்கள், ஏகோபித்த அபிலாஷைகள், தரங்களும் தவறுகளும் ஆகிய தலைப்புகளின் கீழ் வரலாற்று நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்