15347 வடிவமைப்பும் தொழில்நுட்பமும்: தரம் 11.

எழுத்தாளர் குழு. இலங்கை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாயா, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2007. (கொழும்பு 10: பிரேமதாச பிரிண்டர்ஸ், 157, ஜயந்த வீரசேகர மாவத்தை).

x, 243 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18 சமீ.

வடிவமைப்பும் தொழினுட்பவியலும் பாடத்திட்டத்திற்கு அமைய 11ஆம் தரத்திற்காகத் தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகம். வலு ஊடு கடத்தல் தொகுதி, கட்டுப்பாட்டுத் தொகுதி, எளிய வார்ப்புச் செயன்முறைகள், இறப்பர் தொழில்நுட்பம், பல்வேறு மேற்பரப்புகளுக்குப் பொருத்தமான நிறைவாக்கல் முறைகள், குறைந்த வோல்ற்றளவில் தொழிற்படுகின்ற சாதனங்களுக்குப் பொருத்தமான வோற்றளவுகளைப் பெற்றுக்கொள்ளல். சுற்றுக்களை கட்டுப்படுத்துவதற்கான உணரிகள், மின்காந்த அலைகளின் மூலம் கேள்தகைமை சமிக்ஞைகளைப் பெற்றுக்கொள்ளல் ஆகிய எட்டு பாடங்களை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 80789).

ஏனைய பதிவுகள்

12896 – வைகுந்த திலகம்: ஆயர்பாடி ஆழ்வார் ஸ்ரீ வே.த.மயில்வாகனம் நினைவு மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. தெல்லிப்பழை: திருமதி லட்சுமி மயில்வாகனம் குடும்பத்தினர், ஆயர்பாடி, மாவிட்டபுரம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 74 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,