வே.நவமோகன் (புனைபெயர்: கணினிப்பித்தன்). தெகிவளை: வெப் இன்டர்நெஷனல், இல. 7/3, ரூபன் பீரிஸ் மாவத்தை, களுபோவில, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்,). 68 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 22 x14.5சமீ., ISBN: 955-97518-9-1. கணினி உலகில் இணையப் பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் HTML மொழியை இந்நூல் எளிமையாக அறிமுகம் செய்கின்றது. தினகரன் வாரமஞ்சரியில் தொடர்ச்சியாக பிரசுரமாகிவந்த இலகு தமிழில் HTML என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடரின் தொகுத்த நூல்வடிவம் இதுவாகும். HTML இன் ஆரம்பப் பதிப்பு HTML 1.0 ஆகும். பின்னர் வந்த திருத்தப்பட்ட பதிப்புக்களின் வாயிலாக விருத்தி கண்ட HTML 4.0 பயன்படுத்தப்பட்ட வேளையில் இக் கட்டுரைகள் வெளியிடப்பட்டிருந்தன. எனவே HTML 4.0ஐ அடிப்படையாகக் கொண்டு HTML இல் உள்ள அடிப்படை விடயங்கள் அனைத்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 35671).