14004 கணனி ஒரு அறிமுகம் (கணனியியல் பாகம் 1): கணனி வன்பொருள்.

சின்னத்துரை சற்குணநாதன். ஜேர்மனி: கணனியியல் கல்வி நிலையம், Norderneyer Str.3, 65199, Wiesbaden வீஸ்பாடின், 1வது பதிப்பு, 2006. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (6), 95 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 14சமீ. கணனித் துறையில் தனது முப்பதாண்டு சேவையினை அடிப்படையாகக் கொண்டு Hardware பற்றிய இந்நூலை உருவாக்கியுள்ளார். முதலாம் அத்தியாயத்தில், கணனி ஒரு அறிமுகம், கணனியின் தொழில்நுட்ப வளர்ச்சியும் இதன் ஆரம்பமும், அபகஸ், இலத்திரனியல் கணனியின் ஆரம்பம், மின் சக்தியின் உதவியுடன் இயக்கப்பட்ட முதற் கணனி, எண் இலத்திரனியல் கணனி, மையச் செயற்பாட்டகம் அறிமுகங்கள், கணனித் தொழில்நுட்ப வல்லுநர்களின் செயற்பாடுகள், கணனித் தொழில்நுட்பக் கலைச்சொற்கள், கணனி ஆங்கிலக் கலைச்சொற்களின் விரிவாக்கம் என்பனவும், இரண்டாம் அத்தியாயத்தில் இலத்திரனியல் தகவற் தொடர்பியல், ஆரம்பகாலத் தொலைத் தொடர்பியல் முறைகள், கணனியின் இருமை எண் மொழி, இருமை எண் கணிப்பு முறை, சமாந்தர, தொடர் மின்னணுச் சாதனங்கள், ஆஸ்கி குறியீடு, மின்னணு இணைப்பு, கணனி தொழில்நுட்பக் கலைச்சொற்கள், கணனி ஆங்கிலக் கலைச்சொற்களின் விரிவாக்கம் என்பனவும், மூன்றாம் அத்தியாயத்தில் நுகர்வோர் கணனியின் செயற்பாட்டின் மேலோட்ட விளக்கம், கணனியின் மூன்று கட்டக் கணிப்புப் பகுதிகள், தகவல் உட்செலுத்துதல், தகவல் செயற்படுத்தல், தகவல் வெளிக்கொண்டுவருதல், தகவல் உட்செலுத்தல், செயற்படுத்தல், வெளிக்கொண்டுவருதல் என்பவற்றைத் தொழிற்படுத்தும் முறை, பல்வேறு விதமாகத் தொழிற்படும் கணனிப் பாகங்களான இலத்திரனியல் சாதனங்கள், தகவல் உட்செலுத்தும் கணனி மின்னணுச் சாதனங்கள், தகவல் செயற்படுத்தும் கணனி மின்னணுச் சாதனங்கள், தகவல் வெளிக்கொண்டுவரும் கணனி மின்னணுச் சாதனங்கள், தகவல் உட்செலுத்தல், வெளிக்கொண்டுவருதல் ஆகிய இரு செயற்பாடுகளைச் செய்யும் மின்னணுச் சாதனங்கள், கணனியின் தரமான செயற்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் உறுதுணையான வன்பொருட்கள், கணனி தொழில்நுட்பக் கலைச்சொற்கள், கணனி ஆங்கிலக் கலைச்சொற்களின் விரிவாக்கம் என்பனவும் விளக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41076).

ஏனைய பதிவுகள்