14005 கணினி வழிகாட்டி: 5.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, மே 2003. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்). 48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-98004-3-4. Task Bar ஐ ஒழுங்கமைப்பது எப்படி? Flash Drive என்றால் என்ன?, MP3 என்றால் என்ன?, CDகளைப் பாதுகாப்பது எப்படி?, பிரின்டர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?, இரும மொழி என்றால் என்ன?, Brief Case என்றால் என்ன- அதை பயன்படுத்துவது எப்படி?, Restore செய்வது எப்படி?, Peep ஒலிகளைக் கொண்டு பிரச்சினைகளை அறிவது எப்படி?, விண்டோவை பயன்படுத்துவது எப்படி?, ஈ-மெயில், Windows Explorer என்றால் என்ன?, System Standby என்றால் என்ன?, இன்டர்நெட் பிரௌசர்களை பயன்படுத்துவது எப்படி?, பாலியல் தளங்களை வடிகட்டுவது எப்படி?, மைக்ரோசொப்ட் பவர்பொயின்ட்- சில குறுக்குவழிகள், இன்டர்நெட் துணுக்குகள் ஆகிய கேள்விகளுக்கு இந்நூலில் விளக்கப் படங்களுடன் பதிலளிக்கப்பட்டுள்ளது. இக்குறிப்புகள் முன்னர் தினகரன் வாரமஞ்சரியில் கணனி மஞ்சரி பகுதியில் வெளிவந்திருந்தன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 29980).

ஏனைய பதிவுகள்

17698 மனதும் இடம்பெயரும்: சிறுகதைகள்.

நிவேதா உதயராஜன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், விலை: ரூபா