14006 நூல்தேட்டம் தொகுதி 14.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xviii, 623 பக்கம், விலை: ரூபா 2500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955- 659-666-3. தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியலின் பதினான்காவது தொகுதி இதுவாகும். இத்தொகுதியில் மேலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு தூவி தசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, பாடவாரியாகப் பதியப்பட்டுள்ளது. பதிவுகள் 13001- 14000 வரை தொடர் இலக்கமிடப்பட்டுள்ளன. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும், முன்னைய தொகுதியின் பதிவுகளுக்கான மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும்.

ஏனைய பதிவுகள்

12644 – அபிவிருத்திக்கான முகாமைத்துவச் சிந்தனைகளும் செயற்பாடுகளும்.

மா.செல்வராஜா. மகரகம: மா.செல்வராஜா, கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1996. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 1,B.T.P.DeSilva Mawatha). 163 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21.5×14 சமீ., ISBN:

14096 மட்டுநகர் ; ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ; ஆலய வரலாறு.

த. நாகையா. (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: த.நாகையா, கோட்டைமுனை, 1வது பதிப்பு, ஆடி 1996. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). (12), 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. மட்டக்களப்பு ஸ்ரீ