15358 புற்றுநோய் : ஒரு எளிய அறிமுகம்.

சுப்பிரமணியம் ரவிராஜ். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, ஜீன் 2021, 1வது பதிப்பு, ஜனவரி 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

64 பக்கம், வண்ணப் படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-720-2.

புற்றுநோய் என்பது எமது உடற் கலங்களில் ஏற்படும் அசாதாரண கலப் பெருக்கத்தாலும் கலங்களின் பரிமாண மாற்றங்களினாலும் ஏற்படும் ஒரு நோய் நிலைமை ஆகும். தொற்றா நோயாக வகைப்படுத்தப்பட்டுள்ள புற்றுநோயினைப் பற்றிய அறிமுகத்தினை இந்நூல் வழங்குகின்றது. புற்றுநோய் என்றால் என்ன, புற்றுநோயைத் தூண்டக்கூடிய காரணிகள், புற்றுநோயின் வகைகள், அவற்றிற்கான நோய் அறிகுறிகள், அவற்றிற்கான சிகிச்சைகள் என்பவற்றினை இந்நூல் அறிமுகம் செய்கிறது. சமூக நலப் பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு வழிகாட்டியாக இந்நூல் அமையும். பேராசிரியர் சு.ரவிராஜ் தனது மருத்துவப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திலும் சத்திரசிகிச்சைத் துறையில் ஆனு பட்டத்தினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத்திற்கான பட்டப் பின்படிப்பு நிலையத்திலும் பெற்றவர்.  தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாகவும் சத்திர சிகிச்சைத் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.

ஏனைய பதிவுகள்

9 Reel Ports

Blogs Orient express play slot – Some Best Ports We believe You should try How exactly we Speed and you will Opinion Online slots games