15361 உங்கள் குழந்தைகள் நலமாக வாழ.

ச.முருகானந்தன். கண்டி: ஈஸ்வரன் பிரசுரம், 126/1, கொழும்பு வீதி, 1வது பதிப்பு, 2016. (சென்னை 94: ஸ்கிரிப்ட் பிரின்டர்ஸ்).

xii, 164 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-53041-7-7.

மருத்துவர் சண்முகம் முருகானந்தன் சிறுகதைகள், குறுநாவல்கள், விமர்சனக் கட்டுரைகள், நலவியற் கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதிவரும் இலங்கையின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். மீரா பதிப்பக வெளியீடான ‘எயிட்ஸ் இல்லாத உலகம்’ என்ற இவரது மருத்துவ நூல் வடமாகாண விருது பெற்றது.” மூச்சுவிட நேரமில்லாத மருத்துவப் பணியின் மத்தியிலும் தனது எழுத்துப் பணியை ஒரு தவம் போல மேற்கொள்பவர். ‘உங்கள் குழந்தைகள் நலமாக வாழ’ என்ற இந்நூலில் குழந்தைகளின் சுகாதாரப் பராமரிப்பு பற்றிய 38 நலவியல் கட்டுரைகளை தொகுத்துத் தந்துள்ளார். ஆரோக்கியமான குழந்தைப் பேற்றிற்கு, தாய்ப்பாலுக்கு நிகரான உணவு வேறு ஏதுமில்லை, தாய்ப்பால் ஊட்டல் தொடர்பான தவறான எண்ணங்கள், குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளை கவனமாகப் பராமரித்தல் அவசியம், குழந்தைகளின் உடலை மட்டுமல்ல உள நலனையும் கவனியுங்கள், தலையில் ஏற்படும் காயங்கள், கதைத்தல் தாமதமாகும் குழந்தைகள், சிறுவர்களிலும் பெருகிவரும் நீரிழிவு நோய், குழந்தைகளில் அதிகம் ஏற்படுகின்ற தொற்றாத நோய் ஆஸ்மா என இன்னோரன்ன தலைப்புகளில் இக்கட்டுரைகள் இலகு தமிழில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Payphone

Posts Benefits of using Spend By Mobile phone Local casino What exactly is A Paytable? Iphone Ports Book Benefits Plus the Ease of Playing with