15370 சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்.

எம்.ஐ.எம்.ஹிலால். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

vi, 82 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-647-2.

இந்நூல் சந்தைப்படுத்தல் திட்டமிடலுக்குத் தேவையான விளக்கங்களை உள்ளடக்குவதுடன் அதனை மேற்கொள்வதற்கான சந்தைப்படுத்தல் சூழல் ஆய்வு, நுகர்வோர் நடத்தை பற்றிய விளக்கங்கள், மற்றும் சர்வதேச சந்தைப்படுத்தல் போன்றவற்றை விபரிக்கின்றது. இந்நூல், சந்தைப்படுத்தல், சந்தைப்படுத்தல் சூழலினை ஆய்வு செய்தல், சந்தைப்படுத்தல் தகவல் முறைமை, நுகர்வோரின் நடத்தை, வியாபாரச் சந்தைப்படுத்தல், சந்தை துண்டமாக்கல்-இலகுபடுத்தல்-இடம்பதித்தல், உற்பத்தி பொருள் தந்திரோபாயம், புதுப் பொருள் விருத்தி, விலையிடல் தந்திரோபாயம், சந்தைப்படுத்தல் விநியோக வழியினை வடிவமைத்தல், ஒன்றிணைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் தொடர்பாடல், ஆள்சார் விற்பனையும் விற்பனை முகாமைத்துவமும், சேவைகள் சந்தைப்படுத்தல், சர்வதேச சந்தைப்படுத்தல், சந்தைப்படுத்தல் தந்திரோபாயமும் சந்தைப்படுத்தல் திட்டமிடலும் ஆகிய பதினைந்து அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. கலாநிதி எம்.ஐ.எம்.ஹிலால், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்