14020 பகிர்தலும் புரிதலும்: ஞானம் பத்திரிகை ஆசிரியத் தலையங்கங்கள்.

தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxvi, 418 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-8354-88-9. பகிர்தலும் புரிதலும் என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்படும் ஞானம்- ஆசிரியர் தலையங்கங்கள் கடந்த இரண்டு தசாப்தகால அரசியல், சமூக, பொருளாதார, கலை இலக்கிய விடயங்களின் ஒரு வெட்டுமுகத்தை வாசகர்களுக்குத் தொகுத்துத் தருகின்றன. இதில் இலக்கியம் என்ற பிரிவின்கீழ் 26 ஆசிரியத் தலையங்கங்களும், சமூகம் என்ற பிரிவின்கீழ் 25 ஆசிரியத் தலையங்கங்களும், அரசியல் என்ற பிரிவின்கீழ் 25 ஆசிரியத் தலையங்கங்களும், பல்துறை என்ற பிரிவின்கீழ் 25 ஆசிரியத் தலையங்கங்களுமாக மொத்தம் 101 தலையங்கங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஞானசேகரனின் ஆசிரியத் தலையங்கங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களின் அடிப்படையில் அவரின் சமூக, பண்பாட்டு, அரசியல், இலக்கிய, கல்வி, கலைகள் தொடர்பான சிந்தனைகளை பாரம்பரியமான வாழ்வியல் தடத்தில் ஆழமாகக் கால்பதித்த நிலையில் இருந்தவாறே, அதனைக் கடந்த உலக ஓட்டங்களின் தடங்களைத் தொட எத்தனிக்கும் ஈழத்து இலக்கிய அறிஞர் ஒருவரின் கருத்துநிலைகளாக நோக்கலாம். நூலின் இறுதிப் பகுதியில் அமைந்த ‘புரிதல்கள்” என்னும் பகுதியில் அமைந்த பெரும்பாலான குறிப்புகளில் பிரபல எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், வாசகர்கள் எனப் பல்திறப்பட்டோர் ஞானத்துக்கு எழுதிய கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. வரதர், சிற்பி, நந்தி, கே.கணேஷ், வல்லிக்கண்ணன், கா.சிவத்தம்பி முதலான அமரத்துவ மடைந்தவர்களின் கருத்துக்களும், வாழும் பலரது கருத்துகளும் எதிர்வினைகளும் இப்பகுதியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றை ஆசிரியர் தலையங்கங்களுடன் சேர்த்து வாசிக்கும்போது, ஞானம் இதழின் கனதியை புரிந்துகொள்ள முடிகின்றது.

ஏனைய பதிவுகள்

Punt Gambling establishment No-deposit Bonus

Blogs Ambitions Gambling establishment: 25 100 percent free Revolves No-deposit Incentive – siberian storm slot free spins Swimming pools Gambling establishment Sit Casino Exemple De