15371 தாகூரின் யாழ்ப்பாண வருகை: கலை, அடையாளம், கருத்தாடல்.

தா.சனாதனன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

vii, 66 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5  சமீ., ISBN: 978-955-659-724-0.

2015இல் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியதுணைத் தூதரகம் தாகூரின் யாழ்ப்பாண வருகையையும் அவரது 154ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் பொருட்டு விழாவொன்றை யாழ்ப்பாணப் பொது நுலகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்ச்சியில் பத்திரிகைச் செய்திகளிலிருந்து தாகூரின் யாழ்ப்பாண விஜயம் என்ற தலைப்பில் தா.சனாதனனால் வாசிக்கப்பட்ட கட்டுரையின் விரிவாக்கம் இந்நூலாகும். தாகூரின் இலங்கைப் பயணங்கள், யாழ்ப்பாணம்: தாகூரின் இறுதிப் பயணம், இலங்கையில் தாகூரின் வேலைத்திட்டமும் பண்பாட்டு அரசியலும் ஆகிய மூன்று இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  காண்பியக் கலைஞரான தாமோதரம்பிள்ளை சனாதனன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் கலை வரலாற்று விரிவுரையாளராவார்.

ஏனைய பதிவுகள்

15506 என்னடா மோனை என்னத்தை எழுதிறாய்.

கந்தையா பத்மானந்தன் (புனைபெயர்: காரைக்கவி). யாழ்ப்பாணம்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, காரைநகர், 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Didital, 14, அத்தபத்து டெறஸ்). x, 108 பக்கம், விலை: