மூனா (இயற்பெயர்: ஆழ்வாப்பிள்ளை தெட்சணாமூர்த்தி செல்வகுமாரன்). ஜேர்மனி: மனஓசை வெளியீடு, Manaosai Verlag, Schweickerweg 29, 74523 Schwabisch Hall, Deutschland, 1வது பதிப்பு, மார்ச் 2019. (ஜேர்மனி: Stuttgart). (5), 6-144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5 x 15 சமீ., ISBN: 978-3-9813002-7-7. ஓவியராகவும், கருத்தோவியராகவும் அறியப்பட்ட ‘மூனா” தாயகத்தில் தான் சந்தித்துக் கொண்டவற்றில் அவ்வப்போது நெஞ்சில் விழித்துக்கொண்ட சம்பவங்களை சுவைபட இணைய உலகில் பத்தி எழுத்துக்களாகப் பதிவுசெய்து வந்திருக்கிறார். அவற்றில் 22 தேர்ந்த பதிவுகள் இவை. முடித்து வைக்கப்பட்ட வழக்கு, நின்று கொல்லும் தெய்வம் வந்துவிட்டது, மோனைப் பொருளே மூத்தவனே, பெயரைச் சொல்லவா?, காதலிக்காதே கவலைப்படாதே, ஆடவரெல்லாம் ஆடவரலாம், பள்ளிக்கூடம் போகலாம், அறுபது பாகக் கிணறு, ஓடிப்போனவன், கிறுக்கன் என்கின்ற பண்டிதர் வீரகத்தி, கிராமக்கோட்டுச் சந்தி மதவு, சந்தி வாடகைக்கார், மார்க்கிரெற் அன்ரி, முத்து அக்கா, எங்கள் ஊர் முதலாளி, வடையும் மோதகமும் அண்ணன் தம்பி, பார்க்காதே பார்க்காதே, பெண் பார்க்கப் போறேன், கடன் வாங்கிக் களியாட்டம், கள்ளுக்கொட்டில் பக்கம் போகாதே, நாலும் தெரிந்தவன், ஓடிய ஓட்டம் என்ன ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65827).