14030 காந்தி போதனை.

எம்.ஏ.ரஹ்மான். கொழும்பு 13: அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு 13: ரெயின்போ அச்சகம், 231 ஆதிருப்பள்ளித் தெரு). 168 பக்கம், விலை: ரூபா 4.50, அளவு: 19×13 சமீ. இளம்பிறை என்ற மாசிகையை நடத்தியதால் இளம்பிறை ரஹ்மான் என வழங்கப்படும் எம்.ஏ.ரஹ்மான் அவர்கள் அம்மாசிகையைத் தொடங்கும் முன்பாகவே அரசு வெளியீடு நிறுவனத்தை நிறுவியிருந்தார். 1960களில் இது நிகழ்ந்தது. தேசபிதா மகாத்மா காந்தியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஏக காலத்தில் ஐந்து காந்திய நூல்களை அவர் வெளியிட்டார். காந்தியக் கதைகள், காந்தி பாமாலை, காந்தி தரிசனம், மாணாக்கரின் காந்தி, காந்தி போதனை என்பன அந்த ஐந்து நூல்களுமாகும். மகாத்மா காந்தியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய நாட்டின் எந்த மொழியிலும் தனி நபர் ஒருவர் ஒரே தடவையில் ஐந்து நூல்களை வெளியிட்டார் என்ற பெருமை இவருக்குண்டு. ‘காந்தி போதனை” என்ற இந்த நூலை காந்திஜியின் போதனைகளை உள்ளடக்கிச் சிறுவர்களுக்காக எம்.ஏ. ரஹ்மான் எழுதியுள்ளார். உப்பு, சத்தியம், காலம், மூன்று குரங்குகள், பசி, அகிம்சை, செருப்பு, மூன்றாம் வகுப்பு, நடத்தல், கல்வி, தாய்மொழி, மது, கதர் ஆகிய தலைப்புகளில் இவற்றை கட்டுரை வடிவில் எழுதியிருக்கிறார். 25ஆவது அரசு வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31718).

ஏனைய பதிவுகள்