15385 மிருதங்க சங்கீர்த்தனி.

நீ.கிரிதரன் சர்மா. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiii, 60 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×16 சமீ., ISBN: 978-624-5582-03-7.

இசை பயிலும் மாணவர்களுக்கும், இசை ஆர்வலர்களுக்கும் இசையறிவை புகட்டும் வண்ணம் இயற்றப்பட்ட நூல். மிருதங்க வாத்தியத்தின் வரலாறும் அமைப்பும், அடிப்படை இசைக் கலைச் சொற்களும் அவற்றிற்குரிய விளக்கங்களும், மிருதங்க சொற்கட்டுகள் வாசிக்கும் முறை (விளக்கப் படங்களுடன்), 7-35-175 தாளங்கள், தாள தசப்பிராணங்கள், கர்நாடக இசைக் கச்சேரிகளில் மிருதங்க வாத்தியத்தின் முக்கியத்துவம் ஆகிய ஆறு இயல்களில்; இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் நீ.கிரிதரன் சர்மா இலங்கையில் திரு. கஜன் அவர்களிடம் மிருதங்கம் கற்க ஆரம்பித்தவர். தொடர்ந்து திரு. ரகுநாதன், அமரர் ஜம்புநாதன் ஆகியோரிடம் கற்றுத் தேர்ந்தவர். தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மிருதங்கத் துறையில் டிப்ளோமா படிப்பினைத் தொடர்ந்த இவர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தில் மிருதங்கத் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பினை மேற்கொண்டவர். இலங்கையில் 117/67, மஹாவில ஒழுங்கை, பேஸ்லைன் வீதி, கொழும்பு 09 என்ற முகவரியில் வாழும் இவர் அங்கு ‘ராஜஸ்ய இசைக் கலைக்கூடம்’ என்ற இவரது சொந்த இசைக் கலைக்கூடத்தின் மூலம் மிருதங்கம் மற்றும் தபெலா வாத்தியங்களை கற்பித்து வருகிறார்.

ஏனைய பதிவுகள்

Cellular Slots

Posts Best Mobile Casino Applications Rated By Profiles Leading Spend Because of the Cellular telephone Gambling enterprises Gambling enterprise App Application Criteria Can there be