திருவள்ளுவர் (மூலம்), மு.வரதராசனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 739 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 9×5 சமீ. ஏட்டுவடிவில் அகலப் பாங்கில் அச்சிடப்பட்டுள்ள இத் திருக்குறள் நூல், திருக்குறள் தேசிய வாரத்தினை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருக்குறள் பெருவிழா இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி அவர்களினால் 30.08.2019 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. திருக்குறள் பெருவிழா நிறைவேற்றுக் குழுவில் பேராசிரியர் அ.சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. இ.இளங்கோவன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் ஆகியோர் பங்காற்றியிருந்தனர்.