15395 கூத்தே உன் பன்மை அழகு.

சி.மௌனகுரு. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 58 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ.

கால ஓட்டத்தினூடே மாறி வந்த கூத்து பற்றிய கலாநிதி சி.மௌனகுருவின் கருத்தியலும் செயற்பாடுகளும் இச்சிறு நூலில் பதிவுபெறுகின்றன. ஆசிரியர் முன்னர் எழுதிய ‘கூத்த யாத்திரை’ என்ற நூலில் இடம்பெற்றிருந்த ஒன்பதாவது கட்டுரை ‘நந்தவனத்திற்கு அழகு பல்வகைப் பூக்களே’ என்பதாகும். இக்கட்டுரையே இங்கு பரந்த வாசகரைச் சென்றடையும் எதிர்பார்ப்பில் தனிநூலாக உருவாக்கப்பட்டுள்ளது. கால ஓட்டத்தினூடே கூத்து பற்றிய எனது கருத்தியலும் செயற்பாடுகளும் மாறிவந்தமை/ கூத்து உருவாகும் முறையில் அதிகாரம் செயற்பட்ட முறைமை/ போதையும் கலைஞரும்/ கூத்து ஆற்றுகையில் தாரதம்மியம்/ சாதி அமைப்பைப் பேணும் கூத்து/ கூத்தும் படச்சட்ட மேடையும்/ பேராதனைப் பல்கலைக்கழகம் தந்த அறிவு/ உலக நிலைமை/ மேற்கும் கிழக்கும் சந்திப்பு/ பேராசிரியர் வித்தியானந்தன் கூத்தில் செய்த மாற்றங்கள்/ பல்கலைக் கழக வாழ்வின் பின்/ யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்/ அண்ணாவிமார் தந்த அறிவு/ மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களில் கலாநிதிப் பட்ட ஆராய்ச்சியும் அதன் விளைவுகளும்/ இராவணேசன் கூத்து வடிவ நாடகம்/ கிழக்குப் பல்கலைக்கழகத்தில்/ கூத்து ஆய்வுகள்/ கூத்தில் எனது தொடர்வேலைகள்/ புதிய முறையில் இராவணேசன்-வடமோடி/ புதிய முறையில் நொண்டி நாடகம்-தென்மோடி/ புதிய முறையில்காண்டவா தகனம் -வடமோடிப் பாணி/ புதிய முறையில் இமயத்தை நோக்கி-வடமோடிக் கூத்து கலந்த நாடகம்/ புதிய முறையில் ‘தோற்றம்’ நாடகம்-வடமோடிப் பாணி/ மண் நோக்கிய வேர்களும் விண் நோக்கிய கிளைகளும்: ஓர் விவரண அரங்கு-புதிய முறையில் மட்டக்களப்பு கூத்தின் பரிமாணம்/ மனம் மாறிய மன்னர்கள்-வடமோடிக் கூத்து இன்னொரு வகையிலான மீளுருவாக்கம்/ கூத்தும் பரதமும்/ கூத்து கச்சேரி- செய்ய நினைத்திருக்கும் மீளுருவாக்கம்/ சகல ஈழத்துக் கூத்து ஆடல்களையும் இணைத்து ஈழத்தமிழருக்கான புதியதோர்  தேசியத் தமிழ்க் கூத்தை உருவாக்குதல்/ பின் நவீனத்துவ, பின் காலனித்துவ சிந்தனை நோக்கில் எழுந்த புதிய கூத்து மீளுருவாக்கம்/ மூளை அழுகிறது இதயம் சிரிக்கிறது: கூத்து பற்றிய எனது அண்மைக்காலச் சிந்தனைகள் ஆகிய சிறு தலைப்புகளின் கீழ் தனது மனப்பதிவை இந்நூலில் ஆசிரியர் பதிவுசெய்திருக்கின்றார்.

ஏனைய பதிவுகள்