15396 கொழும்பு கொட்டாஞ்சேனை நாடகப் பாரம்பரியம்.

கே.செல்வராஜன். கொழும்பு 15: திருமதி கௌசலாதேவி செல்வராஜன், சிலோன் யுனைட்டெட் ஆர்ட் ஸ்டேஜ், 162/626, 1/1 கிம்புலாஎல, மாதம்பிட்டி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (கொழும்பு: பிருந்தா எண்டர்பிரைசஸ்).

xxii, 291 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 700., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-624-5099- 00-9.

சிலோன் யுனைட்டெட் ஆர்ட் ஸ்டேஜ் கலை நிறுவனத்தின் தலைவரும், அமைப்பாளரும், நாடக எழுத்தாளரும், இயக்குநருமான கே. செல்வராஜன் எழுதியுள்ள நாடகத்துறை சார்ந்த ஆவண நூல் இதுவாகும். கொழும்புக் கலைஞர்கள் பற்றிய பல்வேறு கலைத்துறை சார்ந்த விபரங்கள் இந்நூலிலே அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அன்று தொடக்கம் இதுவரை காலமும் கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள கலைஞர்கள் 270பேரின் விபரங்கள், அவர்கள் நடித்த நாடகங்கள், அவர்கள் கலைத்துறைக்கு ஆற்றிய சேவைகள் ஆகியவற்றை கொண்டதாக இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. நாடக உலகில் கொட்டாஞ்சேனை ஜிந்துப்பிட்டி பிரதேசம் மிக முக்கியமானதாகும். அங்கிருந்த முருகன் அரங்கு நாடக அரங்கச் செயற்பாட்டுக்குப் பிரசித்தம்பெற்றது. கொழும்பு நாடகப் பாரம்பரியம் என்பதில் வெள்ளவத்தை நாடகப் பாரம்பரியம் மற்றும் கொட்டாஞ்சேனை நாடகப் பாரம்பரிம் என்று இரு பிரிவுகள் உண்டு.  எனினும் வெள்ளவத்தைக் கலைஞர்களின் நாடகப் பாரம்பரியம் பெரிதாகப் பேசப்பட்ட அளவுக்கு கொட்டாஞ்சேனை தமிழ்க் கலைஞர்களின் நாடக வரலாற்றை ஆய்வாளர்கள் தொட்டிருக்கவில்லை. அவ்வகையில் இந்நூல் பரந்ததொரு தளத்தின் வரலாற்றினைப் பதிவுசெய்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65926).

ஏனைய பதிவுகள்

Tours Non payants Du 2024

Satisfait Prime De Terme conseillé: highway kings pro machine à sous Les Minimum Gaming Non payants Le montant en brique navigue son horripilante présence également