15398 நஞ்சு மனிதர் (நாடகம்).

சு.சந்திரகுமார் (தமிழ் மூலம்), ஜே.கென்னடி (ஆங்கில மொழிபெயர்ப்பாளர்).கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

63 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-735-6.

Poison Man என்ற ஆங்கிலத் தலைப்பில் வெளிவந்துள்ள இந்நூல் ஒரு ‘இருமொழி’ நூலாக்கமாகும். சமகாலத்தில் இயற்கையுடன் இணைந்து பயிர்செய்யும் முறைமை மாறி, மனிதர்கள் நஞ்சுக்குக் கட்டுப்பட்டு, சக மனிதர்களையும் அழித்து மண்ணையும் வளமற்றதாக்கும் செயற்றிட்டம் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தால் வலுப்பெறுகிறது. இந்த ஒடுக்குதலானது முன்னேற்றம், வளர்ச்சி, இலாபம் எனும் மாயையில் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. வளமான மண்ணை வளமற்ற மண்ணாக ஆக்கி, மனிதரை நஞ்சு மனிதராக்கும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (Development Programme)  நீக்கப்பட்டு, சுய சிந்தனையைத் தூண்டி சுற்றுச் சூழல் நட்புடன் வாழவேண்டும் என்னும் அரங்க ஆற்றுகையாக (Campaign Theatre Performance) இப்பனுவல் அமைகின்றது. சு.சந்திரகுமார் ஈழத்து அரங்கச் செயற்பாட்டாளர். பாரம்பரிய வடமோடிக் கூத்து, தென்மோடிக் கூத்து, மகிடிக் கூத்து, புலிக்கூத்து, வசந்தன் கூத்து ஆகிய கூத்து வடிவங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். கலாநிதி ஜே.கென்னடி கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலைப்பீடத்தின் தலைவராவார்.

ஏனைய பதிவுகள்

15 Better Tennis Gambling Games

Articles Do you know the Finest Online casino games? How to Wager on Activities Online: Gaming Book For beginners Our very own Help guide to

Spil-de

Content Vi har de smukkeste enlige kvinder, inden for du kan mene herti Hvornår bliver DAO pakker leveret indtil pakkeshop? Produkter Sidstnævnte er det nemmeste,