15404 பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களிற் சமூக நோக்கு.

துரை.மனோகரன் (மூலம்), அ.சண்முகதாஸ் (இதழாசிரியர்), ஆ.சிவநேசச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மனிதப் பண்பியற் பீடம், இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, தை 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி).

(2), பக்கம் 6-14, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

சிந்தனை இதழ் பேராதனை வளாக, கலைக் கல்விக் கழகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. ஏப்ரல் 1967இல் முதலில் வெளிவரத்தொடங்கிய இவ்விதழின் ஆசிரியராக கா.இந்திரபாலா விளங்கினார். மொழியியல், அரசியல், பொருளியல், இலக்கியம், வரலாறு, தொல்பொருளியல் சார்ந்த ஆக்கங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ‘சிந்தனை’ யாழ்ப்பாண வளாகத்தினரால் பொறுப்பேற்கப்பட்டது. தை 1967இல் இருந்து மீண்டும்  வெளிவரத்தொடங்கிய இவ்விதழின் ஆசிரியராக அ.சண்முகதாஸ் விளங்கினார். அதன் முதலாவது இதழில் இக்கட்டுரை வெளிவந்திருந்தது. இதில் சோ.கிருஷ்ணராஜா, இ.மதனாகரன், சித்திரலேகா மௌனகுரு, வி.சிவசாமி, அ.சண்முகதாஸ், சு.கம்லத், நா.சுப்பிரமணியம் ஆகியோரின் படைப்பாக்கங்களுடன் துரை மனோகரனின் இக்கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. இவ்வாய்வுக் கட்டுரையின் அச்சகப் பிரதி (Off Print) தனி நூலாகவும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் நாடகங்களிற் சமூக நோக்குப் பற்றி ஆராயப்பட்டுள்ள இவ்வாய்வில் அவரது ‘மாணிக்கமாலை’ என்ற நாடக நூல் தவிர்ந்த ஏனைய நாடக நூல்கள் இடம்பெறுகின்றன. நானாடகம் (1940), இரு நாடகம் (1952) ஆகிய இரு நாடகநூற் றொகுதிகளும், சங்கிலி (1956) என்ற தனிநாடக நூலும் இதில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56943).

ஏனைய பதிவுகள்

Shell out From the Mobile Casinos 2024

Content Almost every other Banking Options What are Airtime Online casinos? What’s Mobile Charging you Gambling enterprise And how Does it Work? Just how Our