14058 வெசாக் சிரிசர 2008.

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச ஊழியர் பௌத்த சங்கம், 53-3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 2008. (கொழும்பு: ANCL, Commercial Printing Department ). iv, 116, ii, 14, vi , 116 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு அரசாங்க சேவைகள் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக மனம் என்பதன் பரம இரகசியம் (த.கனகரத்தினம்), புத்த பகவானின் உபதேசங்களும் முன்மாதிரியும்-கவிதை (ஏ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), பௌத்த தர்மமும் மனித வளர்ச்சியும் (ருவன் பண்டார அதிகாரி) ஆகிய மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45244).

ஏனைய பதிவுகள்

14739 அன்று வந்ததும் இதே நிலா.

குகனேந்திரன். யாழ்ப்பாணம்: நிலாமலர் பதிப்பகம், காங்கேசன்துறை சாலை, கொக்குவில், 1வது பதிப்பு, ஆவணி 2001. (யாழ்ப்பாணம்: ஷாமளி அச்சகம்). (6), 168 பக்கம், விலை: ரூபா 95.00, அளவு: 18.5×12 சமீ. தமிழக ஜனரஞ்சகப்