நெவில் பியதிகம (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச சேவைகள் பௌத்த சங்கம், 1வது பதிப்பு, மே 2012. (கொழும்பு:ANCL, Commercial Printing Department). iv, 136, iv, 16, viii, 112 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப் படவில்லை, அளவு: 21×14 சமீ. இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 77ஆம் ஆண்டாக அரசாங்க சேவைகள் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக இலங்கையில் கண்ணகிபத்தினி தெய்யோ வழிபாடு (புலவர் த.கனகரத்தினம்), நிர்வாணம் அடைவது என்றால் என்ன? (ருவன் பண்டார அதிகாரி), நிலையற்ற வாழ்வு (ஏ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), சிலம்புச் செல்வி- கண்ணகி சிங்கள மக்களின் பத்தினி தெய்யோ ஆனாள் (த.கனகரத்தினம்), புத்தர் யார்? அவருடைய வழி என்ன? (மடுளுகிரியே விஜேரத்ன) ஆகிய ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51321).