ஸ்ரீ காசிவாசி சி.செந்திநாதையர். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம், 411/1, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1969. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம்). (3), xviii, 145 பக்கம், விலை: ரூபா 4.00, அளவு: 18×12.5 சமீ. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் அணிந்துரையுடனும், மகாவித்துவான் பிரமஸ்ரீ சி.கணேசையர் அவர்களின் ஸ்ரீ காசிவாசி செந்திநாதையர் பற்றிய அறிமுகவுரையுடனும் வெளிவந்துள்ள இந்நூல் சமயப் பிரகரணம், வேதாகமப் பிரகரணம், பதிபசுபாசப் பிரகரணம், சரியாபாதப் பிரகரணம், கிரியாபாதப் பிரகரணம், யோகபாதப் பிரகரணம், ஞானபாதப் பிரகரணம், பக்திப் பிரகரணம் ஆகிய அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. இது சி.செந்திநாதையரின் ‘ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரம்” என்ற நூலிலிருந்து மீள்பிரசுரமாகின்றது. செந்திநாதையர் அவர்கள் கந்தபுராணத்தைப் பல நூறுதரம் பயின்று கந்தபுராண நவநீதத்தை எழுதியுள்ளார் என்றும், ‘நவநீதம்” என்றால் வெண்ணெய் என்று பொருள்படும் என்றும் பண்டிதமணி குறிப்பிடுகிறார். யாழ்ப்பாண கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகத்தின் நான்காவது நூலாக இது வெளியிடப் பெற்றுள்ளது. முன்னதாக சேக்கிழார் நாயனார் புராணம், திருக்கேதீச்சரத் திருப்பதிகங்கள், சுவாமி பிள்ளைத் தமிழ் ஆகிய மூன்று நூல்களை இக்கழகம் வெளியிட்டிருந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2913).