14065 சந்தியா வந்தன இரகசியம்.

ஆசிரியர் விபரமோ வெளியீட்டு விபரமோ தரப்படவில்லை. 34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×10.5 சமீ. சந்தியா என்றால் அந்தி நேரம் என்றாலும் காலை, மாலை என இரு வேளைகளிலும் சந்தியா வந்தனம் செய்யப்படுகின்றது. சூரியனைப் போற்றும் இச்சடங்கை நாம் “Sandhyopasana” என்றோ “Sandhyavadhana” என்றோ அல்லது வெறுமே “Sandhyā” என்றோ அழைக்கிறோம். ‘சந்தியா” என்பது இரவு பகலை சந்திக்கும் வேளையையோ (அதிகாலை) அல்லது பகல் இரவை சந்திக்கும் வேளையையோ (அந்திமாலையையோ) குறிக்கும் சொல். சந்தியா வந்தனத்தை ஒரு நாளைக்கு இரு முறை செய்வதே வழக்கம். காயத்ரி மந்திர ஜபமும், புனித மந்திரங்களின் ஜபமுமே சந்தியா வந்தனத்தில் பிரதானமாக செய்யப்படுகிறது. சந்தியாவந்தனம் பற்றிக் கூறும் இந்நூல் விபூதி சுத்தி, விபூதி ஸ்நானம், மந்திரஸ்நானம், ஆசமனம், மானதஸ்நானம், சகளீகரணம், கரசுத்தி, கரநியாசம், அங்கநியாசம், பிராணாயாமம், சிவதீர்த்தகரணம், சந்தியாத்தியானம், மந்திராபிஷேகம், மார்ச்சனம், அகமர்ஷணம், ஆசமனசகளீகரணம், கவசவேஷ்டனம், சதாசிவத் தியானமும் காயத்ரி செபமும், தருப்பணம், அசமன சகளீகரணம், தீர்த்தோபசங்காரம், சூரியோபஸ்தானம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3077).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்