மட்டுவில் ஆ.நடராசா. கொழும்பு 6: ஆ.நடராசா, 25-1/2, ஈ.எஸ். பெர்ணான்டோ மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (6), 44 பக்கம், விலை: ரூபா 70.00, அளவு: 22×14.5 சமீ. மட்டுவில் ஆ.நடராசா அவர்கள், இந்நூலில் கந்தபுராணப் பாடல்கள் பலவற்றையும் இடையிடையே எடுத்துக்காட்டி, சூரசங்காரத்தினையும் அதன் தத்துவத்தையும் விரிவாக எழுதியுள்ளார். தக்க யாகம், சூரன் வரம் பெற்றான், கந்தக் கடவுள் போருக்குப் புறப்பட்டார், சூரன் போருக்குப் புறப்பட்டார், அமரர் அஞ்சினர், ஆறுமுகக் கடவுள் போரிடச் சென்றார், இவனோ பகைவன், குருதிக் குளம், சூரனது சூள், தூதனைக் கொல்லுதல் தகாது, அக்கினி தேவன் கொடியானான், சூரனது தேர் அழிந்தது, இந்திர ஞாலம் வந்தது, சூரன் அண்ட கூடஞ் சென்றான், திருமாலின் உபதேசம், மாயை வந்தாள், தேவர்கள் பறவைகள் ஆனார்கள், சூரன் சக்கரவாகமானான், இந்திகன் மயிலானான், சூரனது மாயவடிவங்கள், மீண்டும் மாயப்போர், திருப்பெரு வடிவம், சூரனது மனம் மாறியது, மீண்டும் மாயப்போர், வேல் இருளை அழித்தது, சூரன் மாமரமானான், வேற்படை சென்றது, சேவலும் மயிலும் ஆகிய தலைப்புகளினூடாக இந்நூலில் சூரசங்காரம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21222).