சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: சரவணமுத்து அம்பலவாணர் அந்தியேட்டித் தின வெளியீடு,சாயுடை, மாவிட்டபுரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2004. (கொழும்பு 13: கீதாபதிப்பகம்). xx, 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ. கலாபூஷணம் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்கள் தொகுத்தளித்துள்ள இம்மலரில், பஞ்சபுராணம், சைவ சமய வாழ்வியற் சிந்தனைகள், சைவ சமய வாழ்வியலுக்கு உபகாரமானவை, சைவசமய நிகழ்வுகளில் மலர்கள், சைவசமய வாழ்வியலிற் சிவசின்னங்கள், சைவ சமய ஒழுகலாறுகள்-சைவ சமயிகள் கைக்கொள்ள வேண்டியவை, சைவ சமய ஒழுகலாறுகள்-சைவ வாழ்வியலுடன் தொடர்புபடக் கூடாதவை, சைவ சமயம் கூறும் தீட்சை நெறி, கோலமிடுதல், அதிசயிக்கத் தக்கதோர் ஆலவிருட்சம்: அம்பலவாணர், சீலம்நிறை தந்தையின் கோலம், பட்டினத்தார் பாடல்கள் ஆகிய 16 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32932).