திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: ரூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை). 88 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 125.00, அளவு: 18.5×12.5 சமீ. வைரவர் வழிபாடு பற்றிய விரிவான தகவல்களைத் தரும் இந்நூலில் வைரவர் வழிபாடு, சிவனின் வைரவத் திருக்கோலங்கள், வைரவர் திருக்கரத்தில் விளங்கும் முத்திரைகள், வைரவர் ஆயுதங்கள், வைரவருக்குரிய வாகனங்கள், காலவைரவர், வைரவமூர்த்தங்களும் அவர்தம் தேவியரும், வைரவருக்குப் பிரியமானவை, இலங்கையில் சிறப்புமிக்க வைரவர் ஆலயங்கள், காரைநகர் பதியுறை ஞான வைரவர் ஆலயங்கள், தலபுராணங்களில் வைரவர் பாடல்கள், வைரவர் காயத்திரி மந்திரம், அருள்மிகு ஞானவைரவர் அர்ச்சனை மாலை-108, ஸ்ரீ காலவைரவர் அஷ்டோத்திரம், திருமுறைகளில் வைரவர் பாடல்கள், வைரவர் வழிபாடும் சோதிடத்தில் தோஷ நிவர்த்தியும், வைரவர் பாடல்கள், சகஸ்ரநாம அர்ச்சனைப் பலன்கள், ஸ்ரீ வைரவர் சஹஸ்ர நாமாவளி ஆகிய 19 பிரிவுகளின்கீழ் விடயதானங்கள் ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ளன.