14094 தில்லைச் சிதம்பரமும் ஈழத்துச் சிதம்பரமும்.

சி.பொன்னம்பலம் (தொகுப்பாசிரியர்). காரைநகர்: ஈழத்துச் சிதம்பரம் சிவகாமசுந்தரர் சமேத ஆனந்த நடராசனின் நூற்றாண்டு நிறைவு வெளியீடு, 1வது பதிப்பு, சித்திரை 2010. (காரைநகர்: கூத்தபிரான் பதிப்பகம்), xxi, 180 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×22 சமீ. காரைநகர், ஈழத்துச் சிதம்பரம் சிவகாமசுந்தரர் சமேத ஆனந்த நடராசனின் நூற்றாண்டு நிறைவு சித்திரை 2008இல் அனுஷ்டிக்கப்பட்டதன் நினைவாக இந்நூல் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் பாயிரவியல், சிதம்பரவியல், ஈழத்துச் சிதம்பரவியல், நடனவியல், திருவாசகவியல், பொதுவியல் ஆகிய ஆறு இயல்களைக் கொண்டுள்ளது. ‘பாயிரவியலில்” கடவுள் வணக்கம், சிறப்புப் பாயிரம், முன்னுரை, ஆசியுரை, வாழ்த்துரை, அணிந்துரை, ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம் பற்றிய செய்தி என்பன தொகுக்கப்பட்டுள்ளன. ‘சிதம்பரவியல்” என்ற பிரிவில் சிதம்பரப் பாமாலை, சிதம்பர மகாதலம், சிதம்பர கும்பாபி ஷேகங்கள், திருக்கோவையார் காட்டும் தில்லையும் ஈசனும், திருவாசகம் காட்டும் தில்லை, சிதம்பர நகர ஆலயங்கள், சிதம்பர நகர மடாலயங்கள், மாணிக்கவாசகரால் சைவம், தில்லைவாழ் அந்தணர், தில்லைக் கோவிந்தர் சிதம்பரக் கோவிலின் பரிவாரத் தெய்வம், நடராஜர் வணக்கம் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ‘ஈழத்துச் சிதம்பரவியல்” என்ற பிரிவில் திண்ணபுரம் அரசடி ஞானவைரவர் திருவூஞ்சல், ஈழத்துச் சிதம்பரம் எனப்படும் திண்ணபுரச் சிவனார் ஆலயம், காரைநகரின் தொன்மை, ஐயனார் வழிபாட்டின் தொன்மை, மகாசாஸ்த ஐயனார் தோற்றம், ஆண்டிக்கேணி ஐயனார் ஊஞ்சல், தீர்த்த விசேடம், ஈழத்துச் சிதம்பர திருப்பள்ளியெழுச்சி, சிவன் ஆலயம், சிவனார் ஆலய வழக்கங்கள், ஈழத்துச் சிதம்பர நடராஜர் பத்து, வடபத்திரகாளி திருப்பள்ளி எழுச்சி, வடபத்திரகாளி திருவூஞ்சல், வரலாறு தொடர்ச்சி, காரை நாட்டுக் கோயில்கள், மடத்துக்கரை அம்பாள் திருவூஞ்சல், ஈழத்துச் சிதம்பர பாலஸ்தாபன கும்பாபிஷேக விபரங்கள், ஐயப்பன் அவதாரம்-ஓர் மீள்வாசிப்பு ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ‘நடனவியல்” என்ற பிரிவில் நடராஜவடிவமும் நடனமும், நடராஜவடிவின் தொன்மைநிலை, பொலநறுவை நடராஜர், நடராஜ வடிவங்கள் சில, புகழ்பெற்ற நடராஜ வடிவங்களும் தலங்களும், நடராஜர் அஷ்டோத்திர மாலை ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ‘திருவாசகவியல்” என்ற பிரிவில் திருவாசகம் தொடர்பானதும் மாணிக்கவாசகர் தொடர்பானதுமான 17 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ‘பொதுவியல்” என்ற இறுதிக் பிரிவில் கடவுள் வணக்கம்- நயினை நாகபூஷணி அம்பாள் திருப்பள்ளியெழுச்சி, சோமஸ்கந்த மூர்த்தி, கோலாலம்பூர் திருக்கோயில்கள், மகேஸ்வர வடிவங்களும் சக்திகளும் ஏனைய கணபதி வடிவங்கள் சுப்பிரமணியர் வடிவங்கள், சிவஞான முனிவரின் சிவஞானபோதச் சிற்றுரையின் தெளிவுச் சுருக்கம், கச்சியப்பரின் கந்தபுராணத்து மகேஸ்வர வடிவங்கள், பன்னிருசோதி இலிங்கத் தலங்கள், இமாலயப் பிரதேச ஆலயங்கள், சிவபராக்கிரமம் கூறும் 64 சிவமூர்த்தங்கள் மேலும் இறைவனின் வடிவங்கள் சில, பொலநறுவைச் சிவன் கோவில்கள், மேலைத்தேச சைவாலயங்கள், மத்திய கிழக்கு சைவாலயங்கள், சைவாலயங்களின் அழிவுகள், பஞ்சபூதத் தலங்கள், தென்கிழக்காசியாவில் இந்துமதம் பற்றிய குறிப்பு, இந்துமதம் தொடர்பான வரலாற்றுச் சிறப்புக்கள், மாமன்னன் இராசராசன் (பாடல்), ஏனைய அகத்தியரில் சிலர், குருக்கள் தியாகர், ஏறாவூர் சிவலிங்கம், தஞ்சைப் பெருவுடையார் பற்றிய குறிப்புகள், வியாவில் ஐயனார் ஒரு மீள்வாசிப்பு, கதிர்காமநாதன் திருவூஞ்சல் ஆகிய 22 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18798).

ஏனைய பதிவுகள்

Unklug online casino 50 euro bonus Spielbank

Content Banking & Bonusse Wenig bedacht Spielbank Schlussbetrachtung & Ordentliche Datenansammlung Greenspin Bet 15 Freispiele Ohne Einzahlung Exklusiv! Angeschlossen Casino Echtgeld Maklercourtage Unter anderem Eher

12765 – புதுமை இலக்கியம் : பாரதி நூற்றாண்டு முன்னோடி மலர், 1956-1981.

என். சோமகாந்தன், லெ.முருகபூபதி (மலர்க் குழு). கொழும்பு 5: இலங்கை முற்போக்குஎழுத்தாளர் சங்க வெளியீடு, 215 பG, 1/1, பார்க் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1981. (கொழும்பு 10: ருகுணு பிரின்டர்ஸ், 40/4

14701 திருந்திய உள்ளங்கள்: சிறுகதைத் தொகுதி.

அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2015. (திருக்கோணமலை: சண் பிரிண்டர்ஸ், 224, மத்திய வீதி). xii, 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.,