14945 நாடகக் கலைஞர் ஏ.ரி.பொன்னுத்துரை: வெள்ளிவிழா மலர்-1974.

சி.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). தெல்லிப்பழை: குரும்பசிட்டி சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1974. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). ஒஒiஎ, 52 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. பதிப்புரை (பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை), ஆசியுரை (சு.து.ஷண்முகநாதக்குருக்கள்), வாழ்த்துரைகள் (கலாநிதி சு.வித்தியானந்தன், கலையரசு க.சொர்ணலிங்கம், க.கைலாசபதி, செ.சண்முகநாதன், கா.சிவத்தம்பி, சி.சிவபாதசுந்தரம், இலங்கைத் தமிழாசிரியர் சங்கம், ச.சிதம்பரப்பிள்ளை, பொ.சோமசுந்தரம், தங்கம்மா அப்பாக்குட்டி, வ.பொன்னம்பலம், பெ.செல்வரத்தினம், வெ.சுந்தரமூர்த்தி, கனக செந்திநாதன், க.சொக்கலிங்கம், வி.கந்தவனம், சி.சிவசரவணபவன், காரை செ.சுந்தரம்பிள்ளை, செ.கதிரேசர்பிள்ளை, க.வை.தனேஸ்வரன், வை.பொன்னையா, எஸ்.எஸ்.கணேசபிள்ளை, கமலாலயம், அரியாலையூர் கவிஞர் வே.ஐயாத்துரை) ஆகியவற்றைத் தொடர்ந்து, இம்மலரில் மேடை ஏற்றமும் மேன்மக்கள் ஆதரவும், கன்னிப் படைப்பொன்று சன்மார்க்க சபை நிதிக்கு, சென்னை மாநகரில் சேர்ந்திட்ட அனுபவங்கள், தாகம் என்ற ஓரங்க நாடகத்தில் என் பங்கு, ‘இருமனம்” நாடகமும் ‘ஈழகேசரி” விமர்சனமும், ‘கற்புக்கனல்” மூலம் தேவனும் யானும், ‘லையனல் வென்ட்” தியேட்டரில் கொடிகட்டிப் பறக்கின்றேன், இருபத்தைந்து அரங்குகளில் பவனி வந்த ‘நிறைகுடம்”, ‘பண்பின் சிகர”மும் ‘பாசக் குர”லும், ஆறு நாடகங்களுள் ‘ஆயிரத்தில் ஒருவர்”, மாணவர் மத்தியிலே கலையுணர்வு ஊட்டுகிறேன், ‘ஆராமுது அசடா”வில் ‘பாஸ்கர்” பாத்திரம், ‘லும்பினித் தியேட்டரில் இரு தடவை ‘இறுதிப் பரிசு”, ‘நாடகம்” என்ற ஓரங்க நாடகம், வானொலி நாடகமும் ‘தாளக் காவடி”யும், கலைக்கழகப் போட்டியில் பெற்ற சில பரிசில்கள், நூல் வடிவில் எனது நாடக ஆக்கங்கள், ஸ்ரீ லங்கா சாகித்திய மண்டலமும் நாடகக் கருத்தரங்கங்களும், நாடகக் கட்டுரைகள் ஏடேறி வந்தன, சிந்தையை ஈர்த்த சில சிங்கள நாடகங்கள், விமர்சனத்தை ஊக்கி நாடகத்தை வளர்த்தவர்கள், காவியப் பரிசும் கருத்துப் பரிவர்த்தனையும், நாடக மேடையில் நாதஸ்வரக் கலாமேதை திரு.என்.கே.பத்மநாதன், கலைஞர்கள் கௌரவத்தில் களிபேருவகை கொண்டேன், எஸ்.பொ.வின் கணிப்பும் எனது விழிப்பும், பெருமையடைகிறேன் எதற்காகத் தெரியுமா? ஆகிய தலைப்புக்களில் தனது கலையுலக வாழ்வை சுயசரிதையாக்கித் தந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19196).

ஏனைய பதிவுகள்

15 000+ Free Slots and Gokkasten

Content Ihr Provision Bloß Einbezahlung: Diese Beste Anlass, Damit Ein Online Casino & Seine Spielautomaten Auszuprobieren Wie Zijn De Experts Seitenschlag Het Degustieren Großraumlimousine Deze

Position online 5 reel slots Trial Gratis

Articles Learning The overall game: The learning Property value Trial Ports Greeting Extra 100percent Upwards five hundred, 100 Free Revolves Higher Greeting Incentives To make

12499 – யா/புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம் நூற்றாண்டு மலர்.

த.தவரூபன், சு.சண்முகானந்தன் (மலராசிரியர்கள்). புங்குடுதீவு: நூற்றாண்டுவிழாக் குழு, புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம், 5ஆம் வட்டாரம், இறுப்பிட்டி, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). xii,