14115 கண்டி-கட்டுக்கலை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ மீனாட்சி சோமசுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக மலர்.

கே.வி. இராமசாமி (ஆசிரியர்). கண்டி: அகிலம் பதிப்பகம், 308, டீ.எஸ்.சேனநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (64) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ. கண்டியிலிருந்து வெளிவரும் அகிலம் கலை இலக்கிய அறிவியல் சஞ்சிகையின் வைகாசி-ஆனி மாதங்களுக்கான இதழ் மகா கும்பாபிஷேகச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இதில் சமர்ப்பணம்: ஆலய தரிசனம் அமைதியைத் தரும் (கே.வி.இராமசாமி), அருள் விருந்து (தர்ம சக்கரம்), தேவாரம் (திருஞானசம்பந்தர் சுவாமிகள்), ஆசிச் செய்திகள் ஆகியவற்றுடன், திருக்குறள் சிந்தனை (துறவறவியல்), கட்டுக்கலைப் பிள்ளையாரைக் கண்டாலே மேன்மை தரும் (தமிழோவியன்), கண்டி அருள்மிகு ஸ்ரீசெல்வவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் (திருமதி ஞானம் ஞானசேகர ஐயர்), உன் பாதம் சரணமையா -கவிதை (கவிஞர் குறிஞ்சி நாடன்), இணுவைச் சின்னத்தம்பிப் புலவரின் பக்தி இலக்கியங்கள் – ஒரு பார்வை (துரை மனோகரன்), கடவுள் சந்திதானங்கள் (பத்மா சோமகாந்தன்), தமிழ்க் கலைகளும், சைவசித்தாந்தமும், தமிழர் பண்பாடும் (அம்பலவாணர் சிவராஜா), பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலை (வ.மகேஸ்வரன்), கண்டி கட்டுக்கலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வரலாறு (க.ப.சிவம்), பக்திக்கு வித்திட்ட பாவை (இரா.சர்மிளாதேவி), மக்கள் சிந்தனையில் நிர்வாக அறங்காவலர் பணியும் திருப்பணிச் சபை தொண்டர்களும் ஆகிய ஆக்கங்களையும் காணமுடிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44426).

ஏனைய பதிவுகள்

Fortune Rabbit Jogo Do Coelho

Содержимое Melhor Horário Para Jogar Fortune Rabbit à Noite E Dia Explorando a Versão de Demonstração Melhores Horários e Estratégias Quais Os Minutos Pagantes Do

17347 மாந்தோப்பில் ஒரு நாள் (2.3).

பூங்கோதை (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.,