14121 காரைநகர் பண்டத்தரிப்பான்புலம் சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரப ; பெருமான் தேவஸ்தானம் மஹாகும்பாபிஷேக மலர் 2003.

மலர்க் குழு. காரைநகர்: சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரப் பெருமான் ஆலயம், பண்டத்தரிப்பான்புலம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xx,38 பக்கம் + 26 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×22 சமீ. 24.08.2003 அன்று நடைபெற்ற மஹா கும்பாபிஷேக வைபவத்தின்போது வெளியிடப்பெற்ற இம்மலரில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் கூடிய இம்மலரில் சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தான வரலாறு, கோயிற் கலைகள் (அ.சண்முகதாஸ்), மகோற்சவ விளக்கச் சுருக்கம் (ந.பரமசிவம்), அன்னை சிவகாமியின் புதுமை (அ.புண்ணியம்), ஆகமம் (தி.மதிவதனன்), கும்பாபிஷேகங்கள் ஏன் (க.ச.சோமாஸ்கந்தக் குருக்கள்), சிவசக்தி வழிபாடு (பொன் கோபால்), சமய குரவர் காட்டிய அன்புநெறி (ஆ.குணரத்தினம்), நமது சமயம் ஒரு சுருக்க வரலாறு (கோபால் சிவம்), திருமுறைகள் பற்றிய சிந்தனை (சிவஞானம் சிவபாலன்), தேடி நீ ஆண்டாய் (மா.சிவஞானம்), மங்கல வாழ்த்து (கோப்பாய் சிவம்) ஆகிய படைப்பாக்கங்களுடன் சிவபுராணம்-திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி ஆகிய பக்தி இலக்கியங்களும் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 065182).

ஏனைய பதிவுகள்