14123 கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேக சிறப்புமலர்.

எச்.எச்.விக்ரமசிங்க (தொகுப்பாசிரியர்). கொழும்பு: ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, ஜுன் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (52) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ. 11.06.2000 அன்று நிகழ்ந்தேறிய மஹா கும்பாபிஷேக நிகழ்வினையொட்டி வெளியிடப்பட்ட இச்சிறப்பு மலரில், ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், இரண்டு வேத சாகரங்கள் கொழும்பில் சங்கமம் (எச்.எச்.விக்கிரமசிங்க), வளர்ந்து கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம் (சிவஸ்ரீ நடராஜா சோமஸ்கந்தக் குருக்கள்), வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும் (கம்பவாரிதி இ.ஜெயராஜ்), அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய அமைவு (சி.அப்புத்துரை), கொழும்பு – கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் மூர்த்தி தேவஸ்தானம் ஆலயத் திருப்பணிகள் (ம.நடராஜா), வினை தீர்ப்பவனே…. விநாயகனே (மாவை. வானதி சச்சிதானந்தன்), ஒரு பக்தரின் மனதிலிருந்து (சி. பாலசுப்பிரமணியம்), பிள்ளையாரை வழிபட்ட பாலகன் (வே.தங்கராசா), கருணைக் கடல் (க.இராசேந்திரம்), கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் திருவூஞ்சல், பிள்ளையார் வழிபாடு (பிரம்மஸ்ரீ சி.ஹரிஹர சர்மா), அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயக ஆலய நடராஜர் திருவூஞ்சல், புண்ணியஞ் செய்தவர்கள் (என்.சோமகாந்தன்), கும்பாபிஷேகத்தில் சைவ சித்தாந்தம் (இரா. மயில்வாகனம்), மண்ணவரும் விண்ணவரும் மகிழும் மகா கும்பாபிஷேகம் (ச.ஜெயகுமார்), ஐங்கரன் அறநெறிப் பாடசாலை (வி.குஞ்சரா), அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் இரட்டை மணிமாலை (சி.அப்புத்துரை), அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம் வெளியிட்ட நூல்கள் ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 16640).

ஏனைய பதிவுகள்