15424 சிரிப்பு மூடை: சிறுவர் நாடகம்.

தேவநாயகம் தேவானந். சென்னை 86: எம்.வி.ஆடலரசு, Pencil Books, V2 Innovations, 280/1, ஒளவை சண்முகம் சாலை, கோபாலபுரம், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: செயல்திறன் அரங்க இயக்கம், 203/5, கச்சேரி நல்லூர் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2019. (சென்னை 600012: திரிபுரம் பிரின்டர்ஸ்).

(4), 40 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100.00, அளவு: 20×14.5 சமீ.

ஓகஸ்ட் 2015இல் நடந்த நல்லூர் நாடகத் திருவிழாவில் முதல் மேடையேற்றம் கண்ட சிறுவர் நாடகம். அங்கதச் சுவையே நாடகத்தின் அடிநாதமான போதிலும், பெரியவர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கும் சிறப்பான நாடகம். தரம் ஐந்து போட்டிப் பரீட்சைக்காக எல்லா நேரங்களிலும் படி படி என்று சிறுவர்களை இயந்திரத்தனமாக விரட்டியடிக்கும் பெற்றோர்களிடம் எதிரில் பல கேள்விகளை அநாயாசமாகத் தூக்கியெறிகிறது இந்நாடகம். பாடசாலைக்குப் போனால் படி படி வீட்டுக்கு வந்தால் படி படி  என்றால்  பிள்ளைகள் என்னதான் செய்வது? எப்போது தான் விளையாடுவது? வாத்தியார் அசந்த நேரத்தில்தான் அவர்கள் குறும்பு செய்கிறார்கள். வாத்தியார் திரும்பியதும் மீண்டும் படிப்பதாகப் பாவனை செய்கிறார்கள். படிப்பு பிள்ளைகளின் விருப்புக்குரியதாக அல்லாமல் விசனத்துக்குரியதாக மாறிவிட்டமை எவர் குற்றம்?அரிசி, மா, சீனி விலைகள் கூடியதை விட ஐஸ்கிரிம் விலையைக் கூட்டிவிட்டார்களே என்ற அவர்களின் கவலையை எவர் உணர்வார்கள்? பிள்ளைகளின் கனவுகள் எத்தகையன? அவர்களது கற்பனையுலகு எத்தகையது, என்று பல விடயங்களை அடுக்கிக்கொண்டு செல்கிறது நாடகம். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 76174).

ஏனைய பதிவுகள்

16349 பண்பாட்டு மேம்பாட்டிற்கான கலைகள்: இருப்பும் எதிர்பார்ப்பும்: ஆய்வரங்கு கட்டுரைகளின் தொகுப்பு நூல்-2019.

தொகுப்பாசிரியர் குழு. யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல.

9624 நெஞ்சம் கனிந்தது.

திமிலைக் கண்ணன். மட்டக்களப்பு: இராஜம் பிரசுரம், திமிலைத் தீவு, 1வது பதிப்பு, வைகாசி 1971. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்). 32 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 19×12.5 சமீ. திமிலைக்கண்ணன் இறையருள் பற்றிப்பாடும்

17374 எயிட்ஸ் மற்றும் பாலியல் மூலம் கடத்தப்படும் ஏனைய நோய்கள்: சுகாதாரத் தொடர்பாளர் கைந்நூல்.

ஹரிஸ்சந்திர யக்கந்தாவல, எம்.எச்.எம்.யாக்கூத். கொழும்பு: சுகாதாரக் கல்விப் பணிமனை வெளியீடு சுகாதார சேவைகள் அபிவிருத்திச் செயற்றிட்டம், 1வது பதிப்பு, 2002. (கொழும்பு: UNICEF அச்சகம்). (12), 45 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை:

11883 வரவுக் கவிதைகள் வளமுற: ஆய்வுடனான ஒரு விளக்கம்.

அல். அஸூமத். வெல்லம்பிட்டிய: அல்.அஸ{மத், இல.50, கோத்தமி மாவத்தை, வெலேவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (கொழும்பு 14: பிரின்ட் சிட்டி). (8), 206 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ.,