15425 சிறுவர் நாடகப் பாடல்கள்.

தேவநாயகம் தேவானந் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: செயல்திறன் அரங்க இயக்கம், 203/5, கச்சேரி நல்லூர் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மார்ச் 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை).

52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5சமீ.

செயல் திறன் அரங்க இயக்கம் சிறுவர் அரங்கத் துறையில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்ற ஓர் அரங்க நிறுவனம். 2003ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 2006ஆம் ஆண்டு மார்ச் வரை இந்நிறுவனம் சிறுவர்களுக்காகத் தயாரித்த ஏழு நாடகங்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டு இசைத் தட்டாக வெளியிடப்பட்டிருந்தது. சிறுவர் நாடகப் பாடல்கள் என்ற இசைத்தட்டில் இருந்த ஐம்பது பாடல்களும் இந்நூலில் எழுத்துருவில் தரப்பட்டுள்ளன. இந்நூலின் தொடக்கத்தில் ‘சிறுவர் நாடகப் பாடல்கள்’ என்ற தலைப்பில் நா.சிவசிதம்பரம் எழுதிய அறிமுகவுரையும், ‘சிறுவர் நாடகம்- இசை சம்பந்தமான மதிப்பீடு’ என்ற சுகன்யா அரவிந்தன் எழுதிய ஆக்கமும் இடம்பெறுகின்றன. தொடர்ந்து பஞ்சவர்ண நரியார் நாடகப் பாடல்கள், நெஞ்சுறுத்தும் கானல் நாடகப் பாடல்கள், தீனக் குழந்தைகள் நாடகப் பாடல்கள், மந்திரத்தால் மழை நாடகப் பாடல்கள், பந்தயக் குதிரையார் நாடகப் பாடல்கள், கண்மணிக் குட்டியார் நாடகப் பாடல்கள், கண்டறியாத கதை நாடகப் பாடல்கள் என்பவை இடம்பெற்றுள்ளன.  (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 76107).

ஏனைய பதிவுகள்

Offlin Casino’s Te Holland

Volume Oranje Casino Review Holland: Deugdzaamheid Offlin Gokhuis Lijst, Iedereen Actuele Bonussen Kloosterlinge Kerel S Sky Upgraden Ship Technology Slots: Oranje Krans Gokhuis Gij Starburst