15430 குட்டிகளுக்கான குட்டிக் கதைகள்.

கமலினி கதிர் (இயற்பெயர்: கமலினி கதிர்காமத்தம்பி). திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்,  1வது பதிப்பு, ஜ{லை 2021. (சென்னை: ஏ.கே. பிரிண்டர்ஸ்).

64 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 150.00, அளவு: 23×16.5 சமீ., ISBN: 978-81-953066-4-0.

குழந்தைகளிடம் வாழ்வியல் நெறிகளைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்குடன் இதிலுள்ள கதைகள் எழுதப்பட்டுள்ளன. பெரும்பாலான கதைகளில் விலங்குகளே பாத்திரங்களாகின்றன. ஆமையும் முயலும், சுட்டிச் சிறுமி, கம்பனின் நட்பு, பொன் நகரம், மீகாவின் துணிச்சல், பிக்கி அப்பாவும் நானும், உழைப்பின் உயர்வு, அன்பு என்பது, உயர்வ எது, பாரி, ஜில்பியும் நண்பர்களும், ஏன் கவலை?, கடமையைச் செய், அபியும் நானும், நான் பூமி பேசுகிறேன், கழுகும் காகமும், மான்குட்டியும் யானைக்குட்டியும் ஆகிய 17 சிறுவர் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருமதி கமலினி கதிர்காமத்தம்பி. மானிப்பாய் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தாயகத்தில் தட்டெழுத்தாளராகவும், எழுதுவினைஞராகவும், ஆசிரியையாகவும் பணியாற்றியவர். திருமணத்தின் பின்னர் கொழும்பில் சிலகாலம் வாழ்ந்த இவர் 2002இல் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்து சென்றிருந்தார். அங்கு 2006 முதல் சூரிச்-டிட்டிக்கோன் தமிழ்ப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

ஏனைய பதிவுகள்

Bonanza Slot machine

Articles Bright Colors Inside An enjoyable Online game – Angel Princess Rtp play slot Exactly what are the Most recent And most Exciting Slot machines