15442 செல்லப் பிராணிகள்: சிறுவர் சித்திரக் கதைகள்.

ஆனந்தராணி நாகேந்திரன். (புனைபெயர்: நெல்லை லதாங்கி). கரவெட்டி: ஆனந்தா நாடக மன்றம், மகாத்மாவீதி, நெல்லியடி, 1வது பதிப்பு, வைகாசி 2015. (யாழ்ப்பாணம்: சத்தியா பிரின்டர்ஸ்).

16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 180., அளவு: 27.5×21 சமீ., ISBN: 978-955-53908-2-8.

சிவா-கவிதா ஆகிய சிறுவர்களின் வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளைப் பற்றிய சித்திரக் கதை இது. எலி, சீனு என்ற பூனை, ஜிம்மி என்ற நாய், ஆடு, மாடு, ஆகிய பாத்திரங்கள் தம்மை வளர்க்கும் எசமானர்களான மனிதர் மீது கொள்ளும் அவநம்பிக்கையும் பின்னர் ஏற்படும் தெளிவும் இந்நூலில் சித்திரக் கதையாக விரிகின்றது. வடமராட்சி வலயக்கல்வி அலுவலகத்தில் சங்கீத பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றுபவர் நெல்லை லதாங்கி. கலை இலக்கியத்; துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவருபவர். அரச ஊழியர் ஆக்கத்திறன் போட்டித் தொடர்-2014, மேடை நாடகத்திற்கான கதை, நெறியாழ்கை என்பவற்றிற்கு மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டதுடன் நடிப்பிற்காக விசேட விருதினையும் பெற்றுக்கொண்டமை இவரின் பல்வகை ஆற்றலைப் புலப்படுத்துகின்றது.

ஏனைய பதிவுகள்

Real cash Ports Application

Content Does Magic Portals provides 100 percent free spins?: $1 deposit Juicy Booty Rtp Much more NetEnt 100 percent free Position Game Symbols The new

Tragamonedas Sobre Frutas

Content Especialidades De los Juegos Sobre Casino Online Sin cargo: información adicional Juguetear A Treasures Of Troy Tragamonedas Sin cargo Tras una concesión del permiso,