15459 திருக்கரம்: ஆக்க இலக்கிய மலர்-2019.

சு.குணேஸ்வரன், றோ.மிலாசினி (இதழாசிரியர்கள்). கரவெட்டி: பிரதேச கலாசாரப் பேரவை, வடமராட்சி தெற்கு-மேற்கு பிரதேச செயலகம், கரவெட்டி, 1வது பதிப்பு, மார்கழி 2019. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா அச்சகம், பிரதான வீதி, நெல்லியடி).

xii, 73 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

இம்மலரில் கவிதைகள், சிறுகதைகள், நாடகப் பிரதிகள் முதலிய ஆக்க இலக்கியங்களை கரவெட்டிப் பிரதேசப் படைப்பாளிகளிடமிருந்து பெற்று உள்ளடக்கியிருக்கிறார்கள். அவற்றுடன் கலாசாரப் பேரவையின் பண்பாட்டுப் பெருவிழா தொடர்பான தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வடமராட்சி மண் (கவிதை, சி.தனபாலசிங்கம்), மோனாலிசா புன்னகை (சிறுகதை, குப்பிழான் ஐ.சண்முகம்), ஏன் காதலித்தாய் (நாடகப்பிரதி, செ.கதிர்காமநாதன்), நானும்தான் பார்த்துவிட்டேன் (கவிதை, செ.கதிர்காமநாதன்), தமிழோடு செம்மொழியாய் ஆனவளே (கவிதை, வதிரி கண.எதிர்வீரசிங்கம்), சாகாத காற்றின் சந்தங்கள் (கவிதை, ந.பாக்கியநாதன்), இதையும் கேள் எம்பாவாய் (சிறுகதை, இராகவன்), தேசம் (கவிதை, சிவ.சிவகுமார்), அகமுகன் (சிறுகதை, க.ந.ஆதவன்), நாம் இழுத்துவந்த தேர் (கவிதை, த.அஜந்தகுமார்), அவன் ஒரு நாட்கூலி (சிறுகதை, எஸ்.ஜே.ஜெயக்குமார்), நெஞ்சமே நீ அறி (கவிதை, சீ.சாந்தநாதன்), அறிவு (கவிதை, சீ.சாந்தநாதன்), பெண் பிள்ளை (நாடகப்பிரதி, சி.பத்மராஜன்), மெய்யிழந்த வாழ்வின் பாடல் (கவிதை, வேல்நந்தன்), காலப் பெருந்துயரின் பாடல் (கவிதை, வேல்நந்தன்),  புரியாத புதிர் (சிறுகதை, நா.ஆனந்தராணி), மீள மீட்கும் வேளை அழுகை வரும் காதை (கவிதை, சமரபாகு சீனா உதயகுமார்), தெய்வ சித்தம் (நாடகப் பிரதி, புனிதவதி சண்முகலிங்கம்), ஆகிய படைப்பாக்கங்களை இம்மலரில் காணமுடிகின்றது. 2019ஆம் ஆண்டு பண்பாட்டுப் பெருவிழாவில் கௌரவம் பெற்ற கலைஞர்கள், நிகழ்;ச்சிக் குறிப்பு, பண்பாட்டுப் பெருவிழா ஒளிப்படங்கள் என்பனவும் பின்னிணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Bingo You Wikipedia

Posts Sherlock Holmes The newest Lucky 8 Range Gamble Position Hunt for Blackwood Ports Fortunate Nugget Gambling establishment Bonus Rules Betvoyager Gambling establishment Inside the

15926 கலைத்தூது: நீ.மரியசேவியர் அடிகளாரின் அகவை அறுபதின் சிறப்பு மலர்-1999. மலர்க் குழு.

யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (122) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×20.5 சமீ. கலாமன்ற உறுப்பினர்களதும் பிற பிரமுகர்களினதும் வாழ்த்துச் செய்திகளுடனும் நீ.மரியசேவியர்