15460 நீங்களும் எழுதலாம்: கவிதையிதழ் தொகுப்பு.

எஸ்.ஆர்.தனபாலசிங்கம். திருக்கோணமலை: எஸ்.ஆர்.தனபாலசிங்கம், 43/4, சனல் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (அல்வாய்: மதுரா கிரப்பிக்ஸ் ரூ ஓப்செட் பிரின்டர்ஸ்).

xiv, (4), 468 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 22.5×10 சமீ., ISBN: 978-955-53138-1-0.

நீங்களும் எழுதலாம் என்ற தலைப்பில் ‘தடைகளைத் தகர்த்து தகவுகளைத் தேடி’ என்ற மகுட வாசகங்களுடன் இருமாத கவிதை இதழ் பங்குனி-சித்திரை 2007 முதல் திருக்கோணமலையிலிருந்து வெளியிடப்பட்டு வந்துள்ளது. எஸ்.ஆர்.தனபாலசிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 2007-2009 இடைப்பட்ட காலத்திற்குரிய இச்சஞ்சிகையின் முதல் 12 இதழ்களைத் தொகுத்து தனி நூலுருவில் 1ஆவது தொகுதியாக வெளியிட்டுள்ளார். இதுவரை 27 இதழ்களைக் கண்ட நீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் பின்னைய இதழ்கள் இரண்டாம் தொகுதியில் வரவிருப்பதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இக்கவிதைச் சிற்றிதழ் வெளிவந்த காலத்தில்அதனை மையப்படுத்தி திருக்கோணமலை மாவட்டத்தில் ஓரு இலக்கிய ஊடாட்டம் தொடர்ந்திருந்தது. இலக்கியச் செயற்பாடுகள் மேலெழுந்தன. அத்தோடு சில இடங்களில் சமூகம் சார்ந்த செயற்பாடுகளாகவும் அவை விரிவடைந்து கருத்துருவாக்கங்களிலும் பங்கேற்றன. இன்றுவரை தொடரும் அவ்வெழுச்சி பற்றிய பதிவுகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

8 Best No deposit Crypto Casinos

Content Heavens Vegas 50 Totally free Spins No deposit Incentive Give Tend to the slot has be available while in the free play form? Must