15461 வளரி: பெண் கவிஞர்களின் சிறப்பிதழ்(கருவி 9, வீச்சு 10).

ஆதிரா முல்லை (முதன்மை ஆசிரியர்), அருணா சுந்தரராசன் (ஆசிரியர்). தமிழ்நாடு: வளரி, இல. 32, கீழரத வீதி, மானா மதுரை 630606, 1வது பதிப்பு, பங்குனி 2018. (தமிழ்நாடு: இதயம் அப்செற் பிறின்டர்ஸ், காளையார் கோயில்).

24 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

வளரி மானாமதுரை, சிவகங்கை மாவட்டம், இந்தியாவிலிருந்து 2009 ஜூன் மாதத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் மாத இதழ் ஆகும். இதன் ஸ்தாபக ஆசிரியர் அருணா சுந்தரராசன். ஆரம்பத்திலிருந்து வளரி (இதழ்) அச்சிதழாகவே வெளிவருகிறது. வளரியின் சார்பில் ‘வளரி எழுத்துக் கூடம்’ என்னும் பதிப்பகமும் இயங்கி வருகிறது. ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் ‘பூமராங்; ஆயுதத்தின் தமிழ் வடிவமே வளரி. சிவகங்கையை ஆண்ட மன்னர்கள் மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் பயன்படுத்திய ஆயுதம் வளரி. இவைகளைக் கருத்தில் கொண்டே வளரி என்ற பெயர் இதழுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இச்சிறப்பிதழில் தமிழகத்திலும் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலிலும் இருந்து எழுதப்பட்ட தமிழ்க் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், கட்டுரை என்பன இடம்பெற்றுள்ளன. கவிதைகளை எழுதிய ஈழத்தவர்களாக மலர் அமலன் (2018?), ஷாமிலா ஷெரீப் (பேய்க்காற்று), பாத்திமா நளீரா (பெண் மிதித்தால்), பாமினி செல்லத்துரை (மழை இறகு), லண்டன் தமிழ் உதயா(ஈரமண்), லண்டன் கலாபுவன் (அர்த்தமுள்ள வெறுமைகள்), ஜேர்மனி சுகி வித்யா (ஒரு துளி மை நான்), பிரான்ஸ் தர்மினி (இரவின் மீதி) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்துமதி ஜயசேனவின் சிங்களக் கவிதையினை பாமினி செல்லத்துரை மொழிபெயர்த்துள்ளார். சந்திரா இரவீந்திரன் (லண்டன்), ‘ஈழத்தில் பெண் கவிஞர்களின் கவிதைகள்’ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். தமிழகத்தின் படைப்பாளிகளான ராமலட்சுமி, இரகமத் பீவி, பிஷான் கலா, திலகவதி, சுபஸ்ரீ ஸ்ரீராம், ப.கல்பனா ஆகியோரின் படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்